மேலும் அறிய

5 Years of Sarkar: விஜய்க்கு வந்த வம்பு.. கதை திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்.. ‘சர்கார்’ வெளியாகி 5 வருஷமாச்சு..!

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை அதிகம் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களை பார்த்தால் எளிதாக கணித்து விடலாம். அத்தகைய படங்களில் சர்கார் படத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பையும், சர்ச்சைகளையும் சந்தித்த சர்கார் படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி

2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு முதல் பாதி வரை நடிகர் விஜய் நடித்த பல படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. இந்த நிலையில்தான் 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக விஜய் வைத்து இயக்கிய துப்பாக்கி படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விஜய்யின் கேரியரில் முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையையும் துப்பாக்கி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான கத்தி படத்தில் இணைந்தது. இந்த படமும் மாபெரும் ஹிட் அடித்ததோடு பல சர்ச்சைகளையும் சந்தித்தது. 

இப்படியான நிலையில் தான் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. இந்தப் படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டு விஜய் சிகரெட் பிடிப்பது போல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே பல பிரச்சனைகளை படம் சந்திக்க தொடங்கியது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் சர்கார் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. 

படத்தின் கதை

சந்தையில் சகப் போட்டியாளர்களை காலி செய்யும் மிகப் பெரிய கார்ப்பரேட் மூளை படைத்தவர் விஜய். அவரைப் பற்றி பிற கம்பெனிகள் தங்களது ஊழியர்களுக்கு பாடம் எடுக்கும் நிலையில் அமெரிக்காவில் இருந்து 5 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வருகை தருகிறார். வந்த இடத்தில் அவருடைய ஓட்டை முன்னதாகவே யாரோ கள்ள ஓட்டாக போட்டுவிட மீடியா முழுவதும் தலைப்பு செய்தியாக மாறுகிறார் விஜய். ஒருபுறம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தண்ணி காட்டும் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதை கண்டு கொதிக்கிறார்.  மறுபக்கம் தமிழகத்தை சுற்றியுள்ள வறுமை என இரண்டும் சேர்ந்து அரசியல்வாதிகளோடு நேருக்கு நேர் விஜய் மோத காரணமாகிறது. இறுதியாக தனது வாக்குரிமை விஜய்க்கு கிடைத்ததா, அரசியலை மாற்ற நினைத்த அவரது எண்ணம் பலித்ததா என்பதே சர்கார் படத்தின் கதை ஆகும். 

அரசியலை முன்னெடுத்த விஜய்

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை அதிகம் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களை பார்த்தால் எளிதாக கணித்து விடலாம். அத்தகைய படங்களில் சர்கார் படத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. உண்மையில் தமிழகத்தில் எத்தகைய தேர்தல் நடந்தாலும் தங்களுடைய ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என புலம்புவார்கள் அதிகம். அப்படி செய்தால் என்ன செய்து தனது வாக்குரிமையை பெறலாம் என்ற விழிப்புணர்வு சர்கார் படத்தின் மூலம் எழுந்தது என்பதே உண்மை. 

மேலும் கத்தி படத்தில் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை விமர்சித்து விஜய் வசனம் பேசி இருப்பார். ஆனால் சர்கார் படத்தில் செய்யப்பட்ட சம்பவங்கள் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகவை கடும் கோபத்திற்கு உள்ளாகியது. குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி பெயரை இப்படத்தின் வில்லியான வரலட்சுமி சரத்குமாருக்கு சூட்டி பிரச்சினையைக் கிளப்பினார்கள்.

அதிமுக தொண்டர்கள் தியேட்டரில் கட்டப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். போராட்டங்களை நடத்தினர். பின்னர் பலத்த எதிர்ப்பு காரணமாக படத்தில் கோமளவல்லி என பெயர் வரும் இடங்கள் மியூட் செய்யப்பட்டது. அதேபோல் படத்தில் அரசின் இலவசங்களை எதிர்ப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று பெரும் பிரச்சினைகளை கிளப்பியது. 

அதேபோல் இந்தப் படம் வழக்கம்போல் ஏ.ஆர்.முருகதாஸ் கதை திருட்டில் சிக்கிக்கொண்டது. இறுதியாக இரு தரப்புக்கும் பஞ்சாயத்து நடைபெற்று சர்கார் படம் செங்கோல் என்ற கதையின் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கலாம் என்ற வகையில் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. 

சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் நிஜ அரசியலின் ஒரு கேரக்டரை நினைவுபடுத்துவது போல் இருந்ததாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதேபோல் அரசியல்வாதிகளாக வரும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி இருவரும் தங்கள் அபாரமான நடிப்பால் விஜய்க்கு சவால் விடும் வகையில் சர்கார் படம் அமைந்திருந்தது. 

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பிரபலமானது. கீர்த்தி சுரேஷ்,யோகி பாபு என பல பிரபலங்கள் இருந்தும் விஜய்யின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சர்காரை கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அவரின் சினிமா கேரியரில் இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியது என்றே சொல்லலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget