Thalapathy Kacheri Lyrics : கொடிய பறக்கவிட்டு கொண்டாடலாமா! ஜன நாயகன் 'தளபதி கச்சேரி' முழு பாடல் வரிகள்
Thalapathy Kacheri Song Lyrics : விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் 'தளபதி கச்சேரி' இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் முழு லிரிக்ஸ் இதோ

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை விஜய் , அனிருத் , அறிவு இணைந்து பாடியுள்ளார்கள். அறிவு பாடல் வரிகளை எழுதியுள்ளார். கத்தி , மாஸ்டர் , லியோ என விஜய்க்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் ஜன நாயகன் படத்தில் விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு குத்துப்பாடலை வழங்கியுள்ளார்.
ஜனநாயகன் ' தளபதி கச்சேரி' லிரிக்ஸ்
'எங்க அண்ணன் 'வி' கச்சேரி
தளபதி கச்சேரி...(2)
ஐஸா அங்க கொஞ்சம் பாரு அண்ணனோட பேரு
ஜொலிக்குது டா
ஸ்லோமோ தெறிக்குது டா...
நண்பா நண்பி செல்லம் கேளு
நம்பிக்கையா சேரு
இருக்குதுடா காலம் பொறக்குது டா
தனக்குனு வாழாத
நீ தரத்துல தாழாத
ஒருத்தனும் வாரானே
திருத்திட போறானே
தங்கமே தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கனா வணங்கன்னா
வெறித்தனமா வைப் ஆகலாமா
எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா
பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே (4)
ஹே பட்டி ஆர் யூ ரெடி
தெறிக்கட்டும் சரவெடி
பறக்கட்டு நம்ம கொடி
வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட
ஸ்டெடி , ஸ்மைல் பட்டி
தீப்பொறி இரு விழி
நீ பதி , புழு வழி
வரும் தலைமுறையெல்லாம் தளபதி பேர சொல்ல
தளபதிக்கு இந்த பாட்டு
நம்ம அண்ணன் போல யாரு காட்டு (2)
ஹே ஒரு மாபெரு நாடு
அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு
மரம் மேல் ஒரு கூடு
அதன் தாய்வழி சொந்தம் இந்த காடு
ஆவோ டூகெதர் பையா பையா
சாதி பேதம் எல்லா லேதய்யா
விங்கல் சினேகம் போல் மண்ணில் எங்கும்
அண்ணன் கண்டில்லா ஓ செய்யா
ஹே ஒருத்தனும் வாறானே
திருத்திட போறானே
தங்கமே தளபதி
ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
வாங்கனா வணங்கன்னா
வெறித்தனமா வைப் ஆகலாமா
எங்கண்ணன் வி கச்சேரி
தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா
தளபதிக்கு இந்த பாட்டு
நம்ம அண்ணன் போல யாரு காட்டு (2)





















