மேலும் அறிய

Simran Net Worth: கமல்ஹாசனின் காதல் கிசுகிசுவில் சிக்கி திரையுலக வாழ்க்கையை தொலைத்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Simran Net Worth: இடையழகால் 90'ஸ் கிட்ஸ் மனதை இளக வைத்த, நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம்.

இடையழகி சிம்ரன்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சிம்ரனை பொறுத்தவரை யாருடன் நடித்தாலும் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடிக்கும் திறன் படைத்தவர், அஜித்துடன் வாலி, அவள் வருவாளா, விஜயுடன் ஒன்ஸ் மோர், ப்ரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், பிரஷாந்துடன் ஜோடி, கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம் என இவர் நடித்த பல படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளது.

தளபதிக்கு இணையாக டான்சில் கலக்கும் நடிகை:

அதே போல் விஜய்க்கு சரிசமமாக டான்ஸிலும் கலக்க கூடிய ஒரே நடிகை சிம்ரன் தான் என பெயர் எடுத்தவர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், 'ஆள்தோட்ட பூபதி' பாடலில் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடி இருப்பர் சிம்ரன். இவர் ஹெவி ஸ்டெப்ஸ் எதுவும் போடாமல் இடையை நளினமாக ஆட்டியபடி ஆடும் டான்ஸை ரசிக்கவும் பல ரசிகர்கள் உள்ளனர். இவரை இடை அழகி சிம்ரன் என்றே பல ரசிகர்கள் தற்போது வரை அழைத்து வருகிறார்கள்.

Simran Net Worth: கமல்ஹாசனின் காதல் கிசுகிசுவில் சிக்கி திரையுலக வாழ்க்கையை தொலைத்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கமல்ஹாசனின் காதல் வலையில் வீழ்ந்த நாயகி:

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சிம்ரன், உலக நாயகன் கமல்ஹாசனின் காதல் வலையில் சிக்கி அவருடன் சில வருடங்கள் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுவே இவரின் திரையுலக வாழ்க்கை சரிவை சந்திக்க காரணம் என கூறப்படுகிறது. பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், சைலண்டாக கமலிடம் இருந்து விலகி தன்னுடைய உறவினர் தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் விரைவில் சிம்ரனின் மூத்த மகன் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிம்ரன் ரீ - என்ட்ரி:

90-களில் ஒரு வருடத்திற்கு 6க்கும் அதிகமான படங்களில் நடித்து வந்த சிம்ரன், குழந்தைகள் பிறந்த பின்னர்,  2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சேவல் படத்தின் மூலமாக, ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக சீமராஜா படத்தில் வில்லியாகவும் , பேட்டை படத்தில் ரஜினியின் காதலியாகவும் நடித்திருந்தார். சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் தரமான வாய்ப்புக்காக காத்திருக்கும் சிம்ரனின் சொத்து மதிப்பு குறித்த தகவலை பார்க்கலாம்.

சிம்ரன் சொத்து மதிப்பு:

Simran Net Worth: கமல்ஹாசனின் காதல் கிசுகிசுவில் சிக்கி திரையுலக வாழ்க்கையை தொலைத்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சுமார் 27 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் சிம்ரனின் சொத்து மதிப்பு  ரூ.20 கோடி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹீரோயினாக நடிக்கும் போது சில லட்சங்களில் மட்டுமே சம்பளமாக பெற்ற சிம்ரன், அப்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். மேலும் தற்போது இவர் நடிக்கும் குணச்சித்தர வேடங்களுக்கு, இந்த காலகட்டத்திற்கு ஏற்ற போல் ஒரு படத்திற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையில் சம்பளம் பெருகிறாராம். பிஎம்டபிள்யூ, ஆடி க்யூ 7 என்று காஸ்ட்லியான கார்களை வைத்திருக்கிறார்.

சென்னையில் ஹோட்டல் ஒன்றையும், டான்ஸ் கிளாஸ் ஒன்றையும் சிம்ரன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரனுக்கு சென்னையில் மட்டும் இன்றி, மும்பையிலும் வீடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிம்ரனின் கணவர் ஒரு தொழிலதிபர் ஆவார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget