மாறி மாறி நலம் விசாரித்துக்கொண்ட அஜித் - விஜய் ! - தூதுவரான யோகிபாபு - சுவாரஸ்ய கதை!
அதே போல விஜய்யும் அஜித் குறித்து யோகிபாபுவிடம் கேட்டறிந்தாராம்.
யோகி பாபு :
அட்மாஸ்ஃபியர் ஆர்டிஸ்டாக இருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.நடிகர்கள் என்றாலே வாய்ப்புகள் எளிமையாக கிடைத்துவிடுவதில்லை. அதற்காக பல காலம் போராட வேண்டும். ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்த நடிகர்கள் பலரும் இன்று மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டனர். அந்த வரிசையில் நடிகர் யோகி பாபுவும் தவிர்க்க முடியாத நடிகர். யோகி பாபு இன்றைக்கு அஜித் , விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
அஜித் விஜய்யுடன் நடித்த அனுபவம் :
யோகிபாபு அதிக கவனம்பெற தொடங்கிய காலக்கட்டத்தில் , அவருக்கு நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருந்திருக்கிறது. அஜித் , விஜய் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் யோகிபாபுவின் ஆசை. வீரம் திரைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில், யோகிபாபு இயக்குநருக்கு ஒரு கோரிக்கை வைத்தாராம். எவ்வளவு சிறிய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை. அஜித் சாருடன் நடிக்க வையுங்க என்றாராம். படம் பேக்கப் செய்வதற்கு முதல் நாள் யோகிபாபுவை அழைத்த இயக்குநர், இது போல சாப்பாடு போட்டு , கட்டி வைத்து அடிக்கும் காட்சி ஒன்று உள்ளது அதில் நடிக்கிறீர்களா என கேட்டாராம். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு யோகி பாபுவை அஜித் கட்டிப்பிடித்து பாராட்டினாராம். அதே போலத்தான் விஜய் சார் நடிப்பில் உருவான தெறி படத்தில் வில்லனுக்கு உதவியாளராக நடித்தாராம் யோகிபாபு. காட்சி ஒன்றில் நடித்து முடித்த பிறகு அஜித்தை போலவே விஜய்யும் யோகிபாபுவை கட்டிப்பிடித்தாராம்.
View this post on Instagram
நலம் விசாரித்துகொண்ட அஜித் , விஜய் :
அஜித்தின் விஸ்வாசம் மற்றும் விஜய்யின் சர்க்கார் இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. அது இரண்டிலேயும் யோகி பாபு ஒரே நேரத்தில் நடித்து வந்தார். அப்போது அஜித் , விஜய் எப்படி இருக்கிறார்? படம் எப்படி போகுது என கேட்டிருக்கிறார். அதே போல விஜய்யும் அஜித் குறித்து யோகிபாபுவிடம் கேட்டறிந்தாராம். சினிமாவை தாண்டிய நல்ல உறவு அவர்கள் இருவருக்கும் இருக்கிறது . ரசிகர்கள்தான் தேவையில்லாமல் மோதிக்கொள்கிறார்கள் என யோகிபாபு தெரிவித்துள்ளார்.