மேலும் அறிய

Vijay 66 | விஜய் 66 அப்டேட்.. அட ஹீரோயினே இவர்தானாம்..

விஜய்யுடன் கியாரா அத்வானி ஜோடி சேரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் 66 படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இத்திரைப்படத்தில் விஜய்யுடன் கியாரா அத்வானி ஜோடி சேரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. விஜய் ரசிகர்கள் இந்தத் தகவலால் குஷியாகிவிட. படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தளபதி 66' என அழைத்து வருகிறது படக்குழு. 

தெலுங்குத் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜூ. விஜய் 66 படத்தை தில் ராஜூ தான் தயாரிக்கிறார். இதனால், இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைவது பெருமையாக இருப்பதாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், தில் ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 66' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் தான் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது.

Vijay 66 | விஜய் 66 அப்டேட்.. அட ஹீரோயினே இவர்தானாம்..

பீஸ்ட் வெளியீடு எப்போது?

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிவரும் அடுத்த படம் பீஸ்ட். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத் திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சிலர் கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் எனக் கூறுகின்றனர். ஆனால் படக்குழு இத்திரைப்படம் குறித்து இதுவரை எவ்விதத் தகவலையும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.

ஆனால், அண்மையில் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் இணையதளத்தில் கசிந்தன. 38 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து நடிகர் விஜய் ரத்த கறையுடன் நடந்துவருவதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் படக்குழு, படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன், டேப் போன்றவற்றை கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது. பீஸ்ட் வெளியீட்டை ரசிகர்கள் எவ்வளவு தூரம் எதிர்பார்க்கிறார்களோ அதே அளவுக்கு விஜய் 66 அப்டேட்களையும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget