மேலும் அறிய

Vignesh Shivan Nayanthara Wedding: மழைச்சாரலாய் தூவும் பூக்கள்! வீடியோவாக வெளியான நயன் - விக்னேஷ் சிவன் கல்யாண பத்திரிகை!

நாளை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில்  காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கோலிவுட்டின் ’லேடி சூப்பர் ஸ்டார்’ எனக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநரும் தன் நீண்ட நாள் காதலருமான விக்னேஷ் சிவனை நாளை (ஜூன்.09) திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணத்தால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமும் பார்ட்டி மோடில் உள்ளது. 

வைரலாகும் பத்திரிக்கை

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இந்த ஜோடியின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக முதலில் சொல்லப்பட்டநிலையில் பின்னர் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியானது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hanoosh🧿❤Narin🧿 (@hanaz_worldmusic)

இந்நிலையில், தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணப் பத்திரிக்கை எனக் கூறி அனிமேட்டட் பத்திரிக்கை ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

இந்து முறைப்படி திருமணம்

இந்து முறைப்படி நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய உள்ளதாக முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் தெரிவித்த நிலையில், பிள்ளையார் படம் உள்ள இந்தப் பத்திரிகை தற்போது இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.

நாளை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில்  காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

200 பேர் மட்டுமே பங்கேற்பு

இந்த திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது.

போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

உல்லாசப் பறவைகள்

அதனைத் தொடர்ந்து பல விருது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்த இந்த ஜோடி, தொடர்ந்து உள்ளூர் தொடங்கி வெளிநாடுகள் வரை உல்லாசப் பறவையாக சுற்றி மகிழ்ந்ததை இவர்களது ரசிகர்கள் சியர் செய்து மகிழ்ந்து வந்தனர்.

தொழிலும் ஒன்றாக பயணம் செய்த இவர்கள்  ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர்.  அந்த வகையில் இவர்கள் தயாரித்த  ‘ராக்கி’  ‘கூழாங்கல்’ உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன. 

அண்மையில் நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியிருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget