Viduthalai 2 Release Date: விடுதலை 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: எப்போது தெரியுமா?
Viduthalai Part 2 Release Date: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி , விஜய் சேதுபதி , மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ள விடுதலை 2 ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக அறிமுகமான படம் விடுதலை. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி இப்படத்தில் சூரிக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானபோதும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றிபெற்றது.
விடுதலை 2 ரிலீஸ் தேதி
We are excited to announce that Viduthalai Part 2 is coming to theaters worldwide on December 20. Get ready for the next chapter!#ViduthalaiPart2FromDec20
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4… pic.twitter.com/G3MDa4uFKc— RS Infotainment (@rsinfotainment) August 29, 2024
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர் , விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். விடுதலை 2 படம் முன்னதாக தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து விடுதலை மூன்றாம் பாகமும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளன.

