Rajinikanth : மெசேஜ் செட் ஆகாது கமர்ஷியல் தான் வேணும்...வெளிப்படையாக பேசிய ரஜினி
வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் ஸ்பீச்
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி இப்படி கூறினார்
"என்னை வாழ வைத்த தெய்வங்களே. ஒருவர் ஒரு ஃப்ளாப் படம் கொடுத்தார் என்றால் அது ஒரு பெரிய டென்ஷன். ஒரு ஹிட் படம் கொடுத்தாலும் அடுத்த படமும் டென்ஷன் தான். முந்தைய படத்தின் சாதனையை இந்த படம் முறியடிக்க வேண்டும் என்று டென்ஷன் . ஒரு படம் ஹிட் ஆவதற்கு ஒரு மேஜிக் நடக்கும். ஜெயிலர் படத்திற்கு அந்த மேஜிக் நடந்தது. இன்றைய சூழலில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி பண்றது ரொம்ப கஷ்டமாகிடுச்சு. பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடிப்பதால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. நான் ஜெய் பீம் படம் பார்த்தேன் எனக்கு அது பிடித்தது. பிறகு தான் தெரிந்தது அது அவருடைய இரண்டாவது படம் என்று. அவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. ஆனால் அவர் படம் டெக்னிக்கலி சூப்பராக இருந்தது. "
'நான் இயக்குநர் ஞானவேலிடம் நீங்க மெசேஜ் சொல்வீங்க அது நமக்கு செட் ஆகாது என்று சொன்னேன். எனக்கு ஒரு கமர்ஷியல் படம் வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னிடம் 10 நாள் டைம் கேட்டார். பின் அவர் எனக்கு ஃபோன் செய்து 'சார் நான் கமர்ஷியல் ஸ்டைடில் ஒரு கதை சொல்கிறேன். ஆனால் என்னால் லோகேஷ் நெல்சன் மாதிரி எல்லாம் எடுக்க முடியாது. " என்றார். நானும் உங்கள் ஸ்டைடில் தான் கேட்கிறேன். லோகேஷ் , நெல்சன் வேணும்னா நான் அவங்ககிட்ட போயிருப்பேனே. என்று சொன்னேன்"
" இயக்குநர் ஞானவேல் தனக்கு 100% அனிருத் தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக வேண்டும் என்றார். நான் எனக்கு 1000% அனிருத் இசையமைப்பாளராக வேண்டும் என்று சொன்னேன்'
" வேட்டையன் படத்தின் பூஜையின்போதே நாங்கள் அக்டோபர் 10 ரிலீஸ் தேதியாக முடிவு செய்து வைத்திருந்தோம். லைகா ப்ரோடக்ஷன்ஸ்க்கு நிதி பிரச்சனைகள் இருந்ததால் அவர்களால் முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியவில்லை. "