வெற்றிமாறனின் புதிய படம் ‛விடுதலை’
வெற்றிமாறனின் புதிய படத்திற்காகு ‛விடுதலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது இயக்குநர் வெற்றி மாறன் தனது அடுத்த படைப்பாக சூரியை வைத்து இயக்குறார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த திரைப்படம் ஜெயமோகன் எழுதிய "துணைவன் " என்னும் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது . சூரி இந்த படத்தின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் , பவானி ஸ்ரீ படத்தின் நாயகி , விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.
.இந்நிலையில் ,இப்படத்தின் தலைப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு "விடுதலை " என்று வைக்கப்பட்டு உள்ளது . ஏற்கனவே இதே பெயரில் கடந்த 1986ம் ஆண்டு சிவாஜி மற்றும் ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது . ஆதலால் அத்தலைப்பு மீண்டும் வைத்துக்கொள்ள அனுமதி கோரி , சம்பந்தப்பட்ட திரைப்பட நிறுவனத்திடம் வெற்றிமாறன் பேசி வருவதாகவும் , விரைவில் இது பற்றிய செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது .