Veera Serial: சூரத் கிளம்பிய மாறன்.. விஷயம் அறிந்து வீரா எடுத்த முடிவு.. வீரா சீரியல் இன்றைய அப்டேட்!
Veera Serial Today Episode Written Update April 19: ராகவன் மாறனை வீட்டுக்கு கூப்பிட “நான் கொலைகாரன். நான் கல்யாணத்தில் இருந்தால் அவங்க குடும்பத்துல கவலைப்படுவாங்க நான் போறேன்” என்று சொல்கிறான்.
Veera Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா.
இ ந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாறனை ராமச்சந்திரன் சூரத்துக்கு கிளம்பி போக சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். வீராவின் வீட்டில் பாண்டியனுக்கு பூஜை செய்து சாமி கும்பிட அவரது அம்மா பாண்டியனை நினைத்து வருத்தப்படுகிறார்.
வீரா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்ல அவரது அம்மா “எங்க சவாரிக்கு போக போறீங்க?” என்று கேட்க, “இல்ல அண்ணன் ஞாபகம் இருக்கு. அதனால ஆட்டோல ஒரு ரவுண்டு போயிட்டு வரேன்” எனக் கிளம்பி வருகிறாள்.
மறுபக்கம் மாறன் கவலையோடு வீட்டிலிருந்து சூரத் கிளம்பி வெளியே வருகிறான். யாரிடமும் எதுவும் சொல்லாமல் டீ கடைக்கு வரும் அவன், சரக்கடித்து விட்டு நண்பர்களிடம் “நான் இருந்தா பிரச்சனை. அதனால நான் கிளம்புறேன்” என்று சொல்லி புலம்பி கொண்டிருக்கிறான். அண்ணன் இறந்த இடத்திற்கு வந்து பூ போட்டு விட்டு இந்த வழியாக வரும் வீரா மாறன் புலம்புவதைக் கேட்கிறாள்.
உடனே ராகவனுக்கு போனே போட்டு விஷயத்தை சொல்ல, அங்கு வரும் ராகவன் மாறனை வீட்டுக்கு கூப்பிட “நான் கொலைகாரன். நான் கல்யாணத்தில் இருந்தால் அவங்க குடும்பத்துல கவலைப்படுவாங்க நான் போறேன்” என்று சொல்கிறான்.
ராகவன் “நீ இல்லாம எப்படி டா? நீ இல்லன்னா நான் தாலி கட்ட மாட்டேன்” என்று சொல்லி மாறனை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.