Varisu: லண்டனில் தொடங்கும் வாரிசு ப்ரி புக்கிங்... டிசம்பர் இறுதியில் இசை வெளியீட்டு விழா
இதுவரை, ஒரு மாதத்துக்கு முன்பே எந்தவொரு படத்தின் டிக்கெட் விற்பனையும் தொடங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகப்போகும் ’வாரிசு’ படத்தின் டிக்கெட் புக்கிங் லண்டனில் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது.
'வாரிசு’ படம் 2023 பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இன்னும் பட வெளியீட்டு சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், ஜனவரி 12ஆம் தேதி அதாவது தைப்பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக படம் வெளியாகலாம் எனத் தகவல்கள் முன்னதாக வெளியாகின. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், லண்டனில் ’வாரிசு’ படத்தின் டிக்கெட் புக்கிங் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை, ஒரு மாதத்துக்கு முன்பே எந்தவொரு படத்துக்காகவும் டிக்கெட் விற்பனை தொடங்கியதில்லை. இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகார்பூர்வ தகவலும் இதுவரை வராத சூழலில் லண்டனில் மட்டும் டிக்கெட் புக்கிங் குறித்த தகவல் வெளியாகிவுள்ளது.
முன்னதாக இந்தப்படத்தில் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல், சிம்பு பாடிய ’தீ தளபதி’ பாடல்கள் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.
View this post on Instagram
’ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் ,விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில் வெளியான ’தீ தளபதி’ பாடல், வெளியான 21 மணி நேரத்திலேயே ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளதை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்துள்ளனர்.