Varisu Second Single: பொங்கல் விருந்துக்கு முன் எஸ்.டி.ஆர் விருந்து.... வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் ரிலீஸ்!
பொங்கல் விருந்து படைக்க நடிகர் விஜய்யின் ’வாரிசு’ படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

’வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்காக சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது இந்தப் பாடல் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் விருந்து படைக்க நடிகர் விஜய்யின் ’வாரிசு’ படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கி, தமன் இசையமைத்துள்ள ’வாரிசு’ படத்தின் ’ரஞ்சிதமே ரஞ்சிதமே...’ பாடல் ஏற்கெனவே வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ள நிலையில், முன்னதாக இப்படத்தில் பெப்பியான பாடல் ஒன்றை நடிகர் சிம்பு பாடியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின.
View this post on Instagram
விஜய் - சிம்பு இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் இப்பாடல் விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இப்பாடல் இரண்டாவது சிங்கிளாக வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
அதன்படி வரும் டிசம்பர் 4ஆம் தேதி இப்பாடல் வெளியாகலாம் எனவும் அதற்கான புரோமோ வீடியோ வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும் இப்பாடலில் நடிகர் சிம்பு - தமன், பாடி இசையமைக்கும் காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து விஜய் - சிம்பு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாகக் களமாடி வருகின்றனர்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தில் ராஜு, சிரிஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

