Jani Master on Varisu: ‘உங்க எதிர்பார்ப்ப வேறலெவல்ல வைய்ங்க’.. வாரிசு அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்.. வெறியேறும் ரசிகர்கள்!
Jani Master on Varisu: வாரிசு திரைப்படத்தில் நடனக் கலைஞராக பணிபுரிந்துள்ள ஜானி மாஸ்டர், படம் எடுக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
![Jani Master on Varisu: ‘உங்க எதிர்பார்ப்ப வேறலெவல்ல வைய்ங்க’.. வாரிசு அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்.. வெறியேறும் ரசிகர்கள்! Varisu Jani Master Shares Update One more Chartbuster loading from actor vijay Spent some crazy moments Jani Master on Varisu: ‘உங்க எதிர்பார்ப்ப வேறலெவல்ல வைய்ங்க’.. வாரிசு அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்.. வெறியேறும் ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/21/c04e5aa03654904d9ad25634debf3b1b1669030494701501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாரிசு திரைப்படத்தில் நடனக் கலைஞராக பணிபுரிந்துள்ள ஜானி மாஸ்டர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாரிசு திரைப்படம்:
இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். சமீபத்தில் வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘வாரிசு’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரலான வாரிசு புகைப்படங்கள்!
வாரிசு படத்தின் படப்பிடிப்பு பணிகளின் போதே, சில காட்சிகள் லீக் ஆகின. அதில், சில சண்டை காட்சிகளும், ராஷ்மிகாவுடனான பாடல் காட்சியும் இடம் பெற்றிருந்தன. மர்ம நபர்களால் வெளியிடப்பட்ட இந்த வீடியோக்கள், வலைதளம் முழுவதும் வைரலாகின. இதனால், விஜய் ரசிகர்கள் பலர் கடுப்பாகினர். அதேபோல ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் ஆகியோர் செல்ஃபி எடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகின. இந்த போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது.
ஜானி மாஸ்டரின் ருசிகர ட்வீட்
தென்னிந்திய திரையுலகில் உள்ள முன்னணி நடன கலைஞர்களுள் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர், வாரிசு திரைப்படத்திற்கும் நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். வாரிசு படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
One more Chartbuster loading from @actorvijay Sir & @directorvamshi Sir's #Varisu 💥
— Jani Master (@AlwaysJani) November 21, 2022
Shot in exquisite locations of #Ballari. Spent some crazy moments. Grateful to these lovely people for being so welcoming & supporting.
Keep your expectations high😎#ThalapathyVijay pic.twitter.com/ESQ4XZ96Y7
கர்நாடகாவில் உள்ள பலாரி எனும் இடத்தில், வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்குள்ள அருங்காட்சியகம் போன்ற இடத்தில், பழங்கால பொருட்களுடன் நிறைய புகைப்படங்களை எடுத்துள்ளார் ஜானி மாஸ்டர். இந்த புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது, “பலாரியின் அற்புதமான இடங்களில் வாரிசு படப்பிடிப்பு நிகழ்ந்தது. உங்களுடைய எதிர்பார்ப்பை அதிகமாக வைத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜானி மாஸ்டரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ரசிகர்களை சந்தித்த விஜய்!
வாரிசு படத்தின் பிசி ஷெட்யூலுக்கு இடையே, நடிகர் விஜய் தனது ரசிகர்களை நேற்று சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் விஜய் வந்த பிறகு, தன்னுடன் போட்டோ எடுத்த ரசிகர்களிடம், நலம் விசாரித்த விஜய் வீட்டை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இயக்கத்தில் உபயோகமான செயல்களை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Man of the masses ! #ThalapathyVijay @actorvijay #Varisu pic.twitter.com/AmphrHvYxm
— ivana (@Actorivana) November 21, 2022
அவரைப் பார்த்த ரசிகர்கள், தளபதியை பார்த்தது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். எங்களுக்கு அவர் அட்வைஸ் செய்தார். முதலில் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். பின் இயக்கத்தை படிப்படியாக வளர்க்க வேண்டும் என்று சொன்னார். எல்லோரையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால், வாரிசு படத்தின் மேல் இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)