Vanitha Vijayakumar | 'கல்யாணமாமே? பெயிண்ட் அடிக்க வந்தோம்' - ப்ராங்க் பாய்ஸை பின்னி பெடல் எடுத்த வனிதா..
வனிதா என்றால் நினைவுக்கு வருவது, சர்ச்சைதான். எப்பொழுது டிரெண்டிங்கில் இருக்கும் இவர், செல்லும் இடம் எல்லாம் வைரலாவார்.
சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜய்குமார் விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். வனிதா விஜய்குமார் விஜயகுமார் இந்த பெயரைக் கேட்டாலே, எல்லாருக்கும் நினைவுக்கு வருவது, சர்ச்சைதான். எப்பொழுது டிரெண்டிங்கில் இருக்கும் இவர், செல்லும் இடம் எல்லாம் வைரலாவார். தனது பேச்சில் உறுதியாகவும் இருப்பவர். பாசிட்டிவ் கமெண்ட்ஸும், நெகட்டிவ் கமெண்ட்ஸும் சரிசமமாக வாங்குபவர்.
இந்நிலையில் அவரை வைத்து யூடியூப் சேனல் செய்த ப்ராங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்ட எறும்பு என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த சிலர் வனிதாவின் வீட்டுக்குச் சென்று திருமணம் நடக்கப் போவதாக சொன்னார்கள், அதனால் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்தோம் என காமெடி கலாட்டா செய்துள்ளனர். முதலில் எதுவும் புரியாமல் விழிக்கும் வனிதா பின்னர், கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்குகிறார்.
ஆனால் ப்ராங் என்பதால் வனிதாவின் பேச்சைக் கொஞ்சமும் கேட்காத அந்த யூடியூப் கும்பல் வேண்டுமென்றே மாற்றி மாற்றி பேசி வனிதாவை சூடேற்றுகிறது. இந்த யூடியூப் வீடியோவை இணையத்தில் சிலர் பகிர்ந்து நகைச்சுவையாக பதிவிட்டுவருகின்றனர். வனிதாவின் நெருங்கிய தோழி மூலமே இந்த ப்ராங்க் செய்யப்படுவதாக யூடியூப்காரர்கள் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே டிஸ்கிளைமர் கொடுத்தும் விடுகின்றனர்.
முன்னதாக, சில காலங்களாக அமைதியாக இருந்த இவர், பிக்பாஸ் மூலம் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்தார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தன்னுடைய ஆளுமைகளால் சக போட்டியாளர்களை டஃப் கொடுத்து ஓடவிட்டார். இதனையடுத்து மக்களிடம் அவருக்கு எதிர்மறையாக விமர்சனங்கள் கிடைத்தவுடன் போட்டியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய சக பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷுடன் கலந்து கொண்டு, நடனம் அடினார். பிறகு நடுவர், ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் இவர், தாலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் அவர் நான்காவதாகத் திருமணம் செய்து கொண்டார் என செய்தி பரப்பினர். பிறகு தான் பவர் ஸ்டாருடன், பிக்கப் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், 4 இல்ல, 40 திருமணம் கூட செய்வேன் என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்