Vanitha Vijayakumar: அந்த மாதிரி ரோல் நமக்கு கிடைக்கல; மலையாள நடிகைகளுக்கு கிடைக்குது - வனிதா காட்டம்
Vanitha vijayakumar : தண்டுபாளையம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகைகளுக்கு கிடைக்காத வாய்ப்புகள் பற்றி பேசி இருந்தார் வனிதா விஜயகுமார்.
கன்னட திரையுலகில் கொடூரமாக கொலை செய்யும் கொலை கும்பலை மையமாக வைத்து வெளியான 'தண்டுபால்யா' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தை மையமாக வைத்து தமிழில் இயக்குநர் வெங்கட் இயக்கியுள்ள திரைப்படம் 'தண்டுபாளையம்'. நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகை சோனியா அகர்வால் பெண் தாதாவாக நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில் 90ஸ் காலகட்டத்தில் இருந்தது போல நேட்டிவிட்டி சார்ந்த படங்களை இப்போது பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. எனக்கு அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு பல படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான அந்த நேட்டிவிட்டி சார்ந்த ஒரு கேரக்டர் கிடைக்கவில்லை. எங்க அப்பா, ராதிகா அக்கா நடிச்சது போல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அது போன்ற ராவான ஒரு கேரக்டர் நம்ம தமிழ் நடிகைகளுக்கு கிடைக்க மாட்டேங்குது. ஆனால் மலையாள நடிகைகளுக்கு அது போன்ற வாய்ப்பு கிடைக்குது.
இயக்குநர் வெங்கட் இந்த படம் பற்றி சொன்னதும் பெயரை பார்த்து இது ஒரு கிராமத்து சப்ஜெக்ட் என்று ஒத்துக்கொண்டேன். ஆனால் நடிக்கும் போது தான் கதை என்ன என்பதே எனக்கு புரிந்தது. ஒரு கேங் லீடர் கேரக்டர் கொடுத்து இருக்கார். கான்செப்ட் வித்தியாசமாக இருந்ததால் ஒத்துக்கொண்டேன். இது போன்ற கேரக்டர் எனக்கு ஒத்துவரும். ஆனால் சோனியா அகர்வால் போன்ற ஒரு சாஃப்ட்டான நடிகைக்கு இப்படி ஒரு மிரட்டலான கேரக்டர் கொடுத்து இருந்தார். ஆனா நான் கூட சில சீன்ல நடிக்க கொஞ்சம் பதட்டப்பட்டேன். ஆனா சோனியா அசால்ட்டா மிகவும் தைரியமா மிரண்டு போற அளவுக்கு நடிச்சாங்க. எங்க இரண்டு பேர் இடையில் கெமிஸ்ட்ரி காம்பினேஷன் இந்த படத்துல ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு.
தண்டுபாளையம் படத்தோட போஸ்டர் பார்த்த இன்றைய இயக்குநர்கள் சிலர் என்னை யங் ராதிகா மாதிரி இருக்கேன் என பாராட்டினாங்க. திரும்பவும் ராதிகாவை பார்த்த மாதிரி இருக்கு என அவங்க சொன்னது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. சரத்குமார் விஜயகுமார் காம்பினேஷன்ல வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் இரண்டு ஹீரோயின்களை பார்த்தது போல இருந்தது என பாராட்டினாங்க. இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் போது அது அவ்வளவு பெரிசா தெரியல. ஆனால் நடிக்கும் போது தான் இப்படி எல்லாம் இந்த உலகத்தில் நடக்குதா என நினைக்கும் போதே பயமாக இருக்கிறது. நிச்சயம் மக்கள் இந்த படத்தை பார்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் இந்த படம் மூலம் கொடுக்கப்படும் மெஸேஜ் என பேசி இருந்தார் வனிதா விஜயகுமார்.