மேலும் அறிய
Advertisement
Vanitha Vijayakumar Controversy: ‛நான் சிங்கிள் தான்... அவைளபிலும் கூட...’ 4வது திருமணம் பற்றி வனிதா பதிவு!
நான் இன்னும் சிங்கிள்தான். அவைளபிலும் கூட. எனவே யாரும் வதந்திகளைப் பரப்பாதீர்கள், நம்பாதீர்கள் எனப் பதிவிட்டிருக்கிறார் வனிதா.
நான் இன்னும் சிங்கிள் தான் என்று 4வது திருமண வதந்தி குறித்து வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். நடிகை வனிதா விஜயகுமார் திருமண சர்ச்சைகளுக்காகவே அறியப்பட்டவராகிவிட்டார்.
இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா.
இந்நிலையில், சில காலம் வனிதா பற்றி சர்ச்சை ஏதும் எழாமல் இருந்தது. அப்போதுதான் அவர் தனது மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிட்டார். பீட்டர்பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடந்தது.
மகள்கள் முன்னிலையில் அவர் செய்துகொண்ட திருமணம் முற்போக்கானது என்று சிலரும், வளர்ந்த பிள்ளைகள் முன் இப்படியா என கலாச்சார காவல் கருத்துகளோடு சிலரும் வாதிட்டுவந்தனர்.
ஆனால், அந்தத் திருமணமும் நான்கே மாதங்களில் கசந்து முறிந்தது. பீட்டர்பாலை வனிதா அடித்து விரட்டினார் என்று பரபரப்பு செய்திகள் பரவின. பீட்டர்பாலின் மனைவியின் நிலையை வனிதா உணர்ந்து சோகத்தைப் பகிர்ந்த நிகழ்வுகளும் கூட நடந்தன.
பீட்டர் பாலைப் பற்றி வனிதா ஒரு உருக்கமான ட்வீட்டை அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "உண்மையில், என்னை விட அவருக்குப் போதைப் பழக்கம்தான் முக்கியம் எனத் தெரிந்தவுடன் மனம் உடைந்துவிட்டது. அனைத்து விஷயங்களிலுமே முட்டாளாக ஏமாந்து போய் நிற்கிறேன். சொந்தக் காலில் நின்று பீட்டர் பாலையும், என் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறேன். வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் எனத் தவறான முடிவுகள் எடுக்க மாட்டேன். திட்டுகிறீர்களோ, பாராட்டுகிறீர்களோ ஏதோ ஒரு விஷயத்தில் அக்கறை இருப்பதால்தான் பேசுகிறீர்கள். இப்போது கூட என்னால் பீட்டர் பால் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. ஆனால், தவறு செய்கிறார். மனம் உடைந்துவிட்டேன், பயமாக இருக்கிறது. அவருக்கு ஏதேனும் ஒன்றால் என்னைத் தான் குற்றம் சொல்ல வருவார்கள், பரவாயில்லை.
இந்த ஒரு வருடம் அவர் என்னைச் சந்தித்தது, என்னை அவர் சந்தித்ததும் ஒரு காரணமாகத்தான் என எடுத்துக் கொள்கிறேன். என் காதல் உண்மை, தோற்றுவிட்டேன். திருமணத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது. ஆனால் எனக்கு அமையவில்லை. என் வாழ்க்கை தொடரும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
Just to let you guys know...am very much single and available..😉.. staying that way...dont spread any rumours nor believe them..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 9, 2021
இதுகுறித்து வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இன்னும் சிங்கிள்தான். அவைளபிலும் கூட. எனவே யாரும் வதந்திகளைப் பரப்பாதீர்கள், நம்பாதீர்கள் எனப் பதிவிட்டிருக்கிறார்.
அந்த ட்வீட்டில் அவர் அவைளபில் என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பது இன்னொரு திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார் என்பதையே குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் தனியாக ஒரு விவாத மேடை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion