Vanitha vijayakumar: யாஷிகாவுக்கு அட்வைஸ், நகுலுக்கு பதிலடி - வரிசைகட்டும் வனிதா ரிப்ளைஸ்..
உன்னை நீயே குற்றம்சாட்டிக் கொள்வதை நிறுத்திக்கொள்.மனசாட்சிக்கு உண்மையாக இரு. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலை வேண்டாம். இந்த கொடூரமான விபத்தில் இருந்து நீ பிழைத்ததற்கு காரணம் உள்ளது.
தனது அனல் பறக்கும் கருத்துகளுக்காக சோஷியல் மீடியாவில் பரபரப்பானவர் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார். அண்மையில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கு அவர் அட்வைஸ் செய்யும் வகையில் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பக்கம் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் ரம்யா கிருஷ்ணனைப் பற்றி புறம்பேசினார் என நடிகர் நகுல் கூறியிருந்தார். அதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வனிதா பேசியுள்ளார்.
கார் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நடிகை யாஷிகா, சாதாரணா வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் விபத்துக் குறித்தும் தோழியின் மறைவு குறித்தும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய தற்போதைய உணர்வுகளை வெளிக்காட்ட முடியவில்லை. நான் உயிரோடு இருக்கவே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றதற்கு பழி சுமத்துவதா? தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பவனி. நீ என்னை மன்னிக்கமாட்டாய் தெரியும். என்னை மன்னித்துவிடு. நான் உன் குடும்பத்தை இப்படியான கஷ்ட நிலைக்கு தள்ளிவிட்டேன். நான் எப்போதுமே உயிரோடு இருக்க குற்றவுணர்ச்சியாகவே இருப்பேன். உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என எண்ணுகிறேன். நீ என்னிடம் திரும்ப வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாட விடும்பவில்லை என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம். என்னுடைய தோழியின் குடும்பத்திற்காக பிரார்த்தியுங்கள். கடவுள் அவர்களுக்கு மன உறுதியை கொடுக்க வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். யாஷிகாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே யாஷிகாவின் அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருக்கும் நடிகர் வனிதா விஜயகுமார், 'விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். அதனால்தான் அது விபத்து. பிறப்பு, இறப்பு எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை யாரும் மாற்ற முடியாது. மேலும் நீயும் பாதிக்கப்பட்டவள்தான். முதலில் உன்னை நீயே குற்றம்சாட்டிக் கொள்வதை நிறுத்திக்கொள். மனசாட்சிக்கு உண்மையாக இரு. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலை வேண்டாம். இந்த கொடூரமான விபத்தில் இருந்து நீ பிழைத்ததற்கு காரணம் உள்ளது’ எனக் கருத்து கூறியுள்ளார்.
Absolutely...too busy living my life to be bothered about blabbing jobless idiots.. what happened on the sets and what was reshot with the judges and edited to viewers are 2 different things...I didn't accept the marks which was given to us so I made my choice to not continue.. https://t.co/win3dq9Y0R
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 3, 2021
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடிகர் ரம்யா கிருஷ்ணனை புறம்பேசினார், வனிதா மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு நேர்காணலில் நடிகர் நகுல் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள வனிதா, ‘நாங்களே வாயை மூடிக்கிட்டு இருக்கோம். மற்றவர்கள் விமர்சிக்க வேண்டாம்’ என பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடிகர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக போட்டியிலிருந்து வனிதா வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.