Valimai Trailer | குறிச்சு வைங்க!! இந்த சீன்ல தியேட்டர் தெறிக்கும்.. வலிமை டீசரும் ஃபேன்ஸ் ரியாக்ஷனும்!!
கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது வலிமை. இந்த சூழலில் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.
அஜித் குமார் நடிப்பில் , ஹச்.வினோத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. வலிமை படத்திற்கான ஹைப் எந்த அளவு இருந்தது , இருக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது. இந்த சூழலில் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.
இந்நிலையில் பரபரவென ஓடும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ட்ரெய்லர் தீனி போட்டது என்றே சொல்லலாம். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களும் ட்ரெய்லருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ட்ரெய்லரில் இடம்பெற்ற சில காட்சிகள் இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாக பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
பைக் ஸ்டண்டுகள்:
அஜித் - பைக் என்பது எப்போதுமே வேற லெவல் காம்போதான். மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால் என அஜித்தில் அனைத்து படங்களிலும் அஜித்தின் பேவரைட்டான பைக் ஒரு காட்சியிலாவது இடம்பெறும். அந்தக்காட்சி ரசிகர்களை புல்லரிக்கவும் செய்யும். ஆனால் வலிமை படத்தின் மெயின் தீமே பைக் என்பதால் ஒவ்வொரு காட்சியும் தெறிக்கவிடுகிறது. படம் முழுக்க பைக்குகள் சீறிச் செல்லும் என்பது கண்கூடாகவே தெரிகிறது.
பஸ் சீன்:
தீரன் அதிகாரம் படத்தில் கூஸ்பம்ப் சீன் என்றால் அந்த பேருந்து சீன் தான். அதேபோலவே வலிமை படத்திலும் ஒரு பேருந்து சீன் இருக்கிறது. குறிப்பாக மேக்கிங் வீடியோ, போஸ்டர்கள், க்ளிம்ஸ்கள் என அனைத்திலும் அந்த பஸ் சீன் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக இந்த ட்ரெய்லரில் மாஸ் காட்சியாக தனியாகவே தெரிந்தது அந்த பேருந்து சீன். தெறிக்கும் தோட்டாக்கள், பறக்கும் பைக்குகள் என அந்த பஸ் காட்சி நிச்சயமாக தியேட்டரில் தெறிக்கவிடும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
மதுரை, சென்னை, வெளிநாடு.
படம் மதுரையின் அழகையும் சென்னையின் பரபரப்பையும் அழகாக காட்டும் என தெரிகிறது. அதேபோல் பல ஸ்டண்ட் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதால் ஒரு கலர்புல் விஷுவல்களை கண்டிப்பாக காணலாம்.
கவனிக்க வைக்கும் வசனங்கள்:
பொதுவாக ஹெச். வினோத் படங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கும். அதேபோல் வலிமை ட்ரெய்லரிலும் பல வசனங்கள் கவனிக்க வைத்துள்ளன.
Suicide பின்னால Crime கூட இருக்கலாம், உயிரை எடுக்கிற உரிமை யாருக்கும் இல்ல சார், "தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்க ஒருத்தனோட சமநிலை தவறினால் அவன் கோபம் எப்படி இருக்கும் என்று காட்டுவேன், வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான் அழிக்க இல்ல, வறுமைல பண்ணிட்டேன் சார் - ஏழையா இருந்து உழைச்சு சாப்பிடற எல்லாரையும் கேவலப்படுத்தாத போன்ற பல வசனங்கள் கைதட்டல்களை கண்டிப்பாக வாங்கும் என இப்போதே உறுதியாய் கூறுகின்றனர் ரசிகர்கள்.