‛டாக்டர்’ முதல் ஷோவில் வலிமை ‛க்லிம்ஸ்’ திரையிடல்.. ஆர்ப்பரித்த ‛தல’ ரசிகர்கள் வீடியோ!
சிவகார்த்திகேயனை காண வந்து, தல தரிசனம் கிடைத்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று திரைக்கு வந்துள்ளது. தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ள அந்த படம், சற்று முன் முதல் கட்சி தொடங்கியது. படம் துவங்குவதற்கு முன் சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் க்லிம்ஸ் திரையிடப்பட்டது. அதை சற்றும் எதிர்பாராத அஜித் ரசிகர்கள், ஆர்ப்பரித்து கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பலரும் அதை தங்கள் செல்போனில் பதிவுசெய்து டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவேற்றி வருகின்றனர். மதுரை அமிர்தம் திரையரங்கில் திரையிடப்பட்ட வலிமை க்லிம்ஸை அஜித் ரசிகர்கள் எழுந்து நின்று கொண்டாடி தீர்த்தனர். அது மட்டுமின்றி தியேட்டர் முழுக்க விசில் பறக்கும் சத்தமும், கூச்சலுமாய் கோலாகலப்பட்டது. க்லிம்ஸிற்கே இந்த சத்தம்என்றால், படம் வெளியானால் தியேட்டர் அதிரும் என்றே தெரிகிறது. சிவகார்த்திகேயனை காண வந்து, தல தரிசனம் கிடைத்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதோ மதுரை அமிர்தம் தியேட்டரில் திரையை அதிர வைத்த வலிமை காட்சியின் ஆர்ப்பரிப்பு...
#Valimai Glimpse At Madurai✨🤩 Amirtham Cinenams #DoctorFDFS pic.twitter.com/IxP6RL96I4
— 𝗚𝗨𝗥𝗨 𝗔𝗞 𝗙𝗥𝗘𝗔𝗞 🔥 (@ItzBillaGuru) October 9, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் அறிந்து கொள்ள...
Sivakarthikeyan on Doctor: ‛எதிர் நீச்சலடி... வென்று ஏற்று கொடி’ சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சிப் பதிவு!https://t.co/BYmCnXFFK4#Doctor #DoctorInTheatres #Sivakarthikeyan #TamilNadu
— ABP Nadu (@abpnadu) October 9, 2021
மறுபடி முதல்ல இருந்தா... மீண்டும் முடங்கிய இன்ஸ்டாகிராம்... பேஸ்புக் சேவை: கொதித்த பயனர்கள்!#facebook #instagramhttps://t.co/9kmYl5898L
— ABP Nadu (@abpnadu) October 9, 2021
#ABPNaduExclusive: ஓபிஎஸ்., கோட்டையில் நீக்கப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்... தேனியை கூறு போட்டது அம்பலம்!https://t.co/AcjmZb23GI#AIADMK #OPS #Theni #TamilNadu
— ABP Nadu (@abpnadu) October 9, 2021
IPL Records: ‛சரவெடியாய் வெடித்த மும்பைக்கு தீபாவளி இல்லை’ - ஐபிஎல் டாப் 5 இன்னிங்ஸ் ஒரு ரீவைண்ட்!https://t.co/shzicIF1kp#MI #MIvsSRH #SRHvMI #IPL2021 #CSK #RCB
— ABP Nadu (@abpnadu) October 9, 2021
Local Body Polls Second Phase LIVE: உள்ளாட்சி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடக்கம்!https://t.co/56xUBh1UIJ#LocalBodyElection #TamilNadu #LiveUpdates #News #TamilNadu
— ABP Nadu (@abpnadu) October 9, 2021