’விஜய்’ நடிப்பில் சச்சின் ரீரிலீஸ்!

Published by: ஜான்சி ராணி

விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரின் அரசியல் வருகை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு சோகமான செய்திதான்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த சச்சின் படம் எல்லாருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கும். துள்ளலான நகைச்சுவ, க்யூட் காதல் படம்.

சச்சின் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும்விதமாக இந்தப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

சச்சின் படம் 18, ஏப்ரல் மாதம் ரீரிலீசாகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்..

சச்சின் படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை..

சச்சின் திரைப்படத்தில் பாடல்களுக்கும் ஹிட்.