Valentine's Day: காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படம் பதிவிட்ட பிரபலங்கள் - என்ன சொன்னாங்க தெரியுமா?
2024 ஆம் ஆண்டின் காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் காதல் துணை மற்றும் இல்வாழ்க்கை துணைக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் தனியாக புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் காதல் துணை மற்றும் இல்வாழ்க்கை துணைக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காதலிக்காதவர்களும் சரி, தங்களுக்கு பிடித்தமான உறவுகளுக்கு அன்புகளை பரிமாறிக் கொண்டும் வருகின்றனர். இப்படியான நிலையில் பல திரைப் பிரபலங்கள் காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை வர்ஷா பொல்லம்மா:
96, பிகில் போன்ற படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா, “மகிழ்ச்சியாக இருப்பது எப்படி - உங்கள் சொந்த நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்கவும் 🤓♥️. மேலும், அதிர்ஷ்டசாலிகளுக்கு நட்பு தின வாழ்த்துக்கள் மற்றும் ரக்ஷாபந்தன் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
நடிகை நதியா:
நீங்கள் என் காதலராக இருப்பீர்களா? என்ற கேப்ஷனோடு 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியான நதியா புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர்:
ஒரு விசித்திரக் கதையிலிருந்து மேஜிக்காக என்ற கேப்ஷனோடு நடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் தின வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரிகிடா:
இரவின் நிழல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை பிரிகிடாவின் காதலர் தின புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை லட்சுமி மஞ்சு:
நடிகர் மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செல்ஃப் லவ் இஸ் பெஸ்ட் லவ்” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க: Valentine's Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

