Vaathi Trailer: தனுஷின் 'வாத்தி' வருகிறார்...டிரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 8ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதுதொடர்பான தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில், தனுஷ் பாரதியார் போன்ற வேடமணிந்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
The D-mania is about to begin 😎#VaathiTrailer / #SIRTrailer releasing on 𝐅𝐄𝐁 𝟖𝐭𝐡 💥@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @adityamusic @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #SrikaraStudios pic.twitter.com/BkSyQtoBiI
— Sithara Entertainments (@SitharaEnts) February 6, 2023
வாத்தி திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷுக்கு ஜோடியாக, சம்யுக்தா நடித்து இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஸ்வேதா மோகன் பாடிய 'வா வாத்தி' பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி இன்றளவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து செகண்ட் சிங்கள் பாடலான 'நாடோடி மன்னன்' பொங்கல் ஸ்பெஷல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வாத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
வாத்தி ஆல்பம்:
வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. படத்தில் மொத்தமுள்ள ஐந்து பாடல்களில் ஏற்கனவே 'வா வாத்தி' மாற்றும் 'நாடோடி மன்னன்' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், கலங்குதே, ஒன் லைஃப், சூர்ய பறவைகளே ஆகிய மூன்று பாடல்களை அன்று வெளியானது. 2023ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகும் முதல் ஆல்பம் வாத்தி திரைப்பட ஆல்பமாகும். இதைதொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாத்தி திரைப்படம், வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.