Vaathi First Single : வெளியானது வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்... ஜி.வி. பிரகாஷ் இசையில் ஸ்வேதா மோகன் குரலில்..
நடிகர் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் 'வா வாத்தி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த நடிகர் தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வா வாத்தி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷுக்கு சிறப்பான ஆண்டு :
தமிழ் சினிமாவுக்கு இது ஒரு பொற்காலமாகவே அமைந்துள்ளது. அடுத்தடுத்து பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வெளியாகி நமது தமிழ் சினிமாவை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. அப்படி வெளியான ஹிட் படங்களில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' திரைப்படங்களும் அடங்கும். இந்த ஆண்டு நடிகர் தனுஷ் திரைவாழ்விலும் ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. வெற்றி படமாக அமைந்தது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தூள் கிளப்பிய இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் 'வாத்தி'.
இரு மொழியில் வெளியாகும் திரைப்படம் :
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. தெலுங்கில் இப்படம் 'சார்' என தலைப்பிடப்பட்டுள்ளது. கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சம்யுக்தா மேனன் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். சென்ற மாதம் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 2ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் 'வாத்தி' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இப்படத்தை தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' எனும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
Here is #VaaVaathi from #vaathi
— G.V.Prakash Kumar (@gvprakash) November 10, 2022
▶️ https://t.co/5XayjqZWly@dhanushkraja #VenkyAtluri @ramjowrites @_ShwetaMohan_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts #SrikaraStudios @adityamusic
வெளியானது 'வா வாத்தி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் :
‘வாத்தி’ (Vaathi) திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 10 -ம் தேதி வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தமிழில் 'வா வாத்தி' என்றும் தெலுங்கில் 'மாஸ்டரு' என்றும் தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடகி ஸ்வேதா மோகன் இப்பாடலை பாடியுள்ளார். தனுஷ் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய திரை விருந்தாக அமைந்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
#Vaathi new stills @dhanushkraja pic.twitter.com/omi61fOhRP
— Dhanush Fans UK (@DhanushFansUK) November 10, 2022