Vaathi 2nd Single: இதுதான் பொங்கல் ஸ்பெஷல்.. வாத்தி படத்தின் 2வது பாடல் 17-ந் தேதி ரிலீஸ்..! ரசிகர்கள் குஷி..!
கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வாத்தி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வா வாத்தி பாடல் வெளியானது. தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார்.
![Vaathi 2nd Single: இதுதான் பொங்கல் ஸ்பெஷல்.. வாத்தி படத்தின் 2வது பாடல் 17-ந் தேதி ரிலீஸ்..! ரசிகர்கள் குஷி..! vaathi movie starrer dhanush samyukhtha second single to be released for this pongal Vaathi 2nd Single: இதுதான் பொங்கல் ஸ்பெஷல்.. வாத்தி படத்தின் 2வது பாடல் 17-ந் தேதி ரிலீஸ்..! ரசிகர்கள் குஷி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/14/d30a08e6844c2d520a9978f3a1f172541673697369650574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாத்தி படத்தின் இரண்டாவது பாடல் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள படம் ’வாத்தி’.
வாத்தி:
இப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது.
தொடர்ந்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வாத்தி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வா வாத்தி பாடல் வெளியானது. தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்பாடல் பலரின் ப்ளே லிஸ்டில் முதலிடம் பிடித்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
பொங்கல் ஸ்பெஷல்:
இந்நிலையில் வாத்தி படத்தின் இரண்டாவது பாடல் இந்தப் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 17ஆம் தேதி இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்துள்ளது, வாத்தி படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 17ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.
View this post on Instagram
மேலும் படத்தின் முதல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் பிற பாடல்கள் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த ஆண்டு தனுஷின் முதல் படமாக வாத்தி வெளியாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)