13 years Of Vaaranam Aayiram | காதல்.. பிரிவு.. பாசம்.. நட்பு.. மறக்க முடியாத வாரணம் ஆயிரம்.. நச்சுனு 4 சீன்.!
மொத்தமே 44 நொடிகள் ஓடக் கூடிய காட்சியில், இன்னைக்கும் என் ஜீனியர்ஸ் இதத்தான் சொல்றேன் உங்க உடம்ப ரெடி பண்ணுங்க.. எல்லா வலியும் போயுடும்னு” என்பார் சூர்யா..
நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில் இன்றளவும் நினைவு கூறப்படும் படம் வாரணம் ஆயிரம். 2008 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
ஒரு படம் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் வரும் போதெல்லாம் நமக்கு வாரணம் ஆயிரம் படம்தான் ஞாபகத்திற்கு வரும். தந்தையின் அன்பு, காதல், விரக்தி, என வாரணம் ஆயிரம் கடத்திய உண்மையான நெருக்கமான காட்சிகள் இன்றளவும் நினைவில் நிற்கின்றன. சுற்றியுள்ளவர்களின் வாழ்கையிலும் ஏதோ ஒரு மாற்றத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி இன்றளவும் வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து, ரசிகர்களால் கொண்டாடப்படும் 4 காட்சிகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அப்பாவின் அட்வைஸ்.. திருப்பி அடித்த சூர்யா
ஆர்த்தியோட பேசுனா நீ பெரிய இவனா.. ப்ளோர் கன்னத்தில் அறை வாங்கிய சூர்யா, கண்ணாடி முன்பு தன்னை அடித்தவனை ஒரு அடியாவது அடித்து விட வேண்டும் என பங்கம் பண்ணிக்கொண்டிருப்பார்.
அந்த சமயத்தில் அப்பா வந்து விட ஏதும் தெரியாவதர் போல் பீரோவை திறப்பார் சூர்யா. மகனை புரிந்து கொண்ட அப்பா என்ன பிரச்னை என கேட்க, அப்பாவிடம் நடந்ததை கூறுகிறார் சூர்யா. இதைக்கேட்ட அப்பா.. நீ ஏன் திருப்பி அடிக்கல என்பார்.. அதற்கு என்ன விட அவன் பெரியவன் என சூர்யா கூற.. அதனால என்ன.. என்று கேட்டதுதான்.. அடுத்த நாள் அவன் இருக்கும் இடத்திற்கு சென்று சம்பவம் செய்வார் சூர்யா. அதேபோல காதலியைத் தேடி நீ அமெரிக்கா போ என கைகாட்டும் அப்பா இன்றளவும் எல்லோருக்கும் பேவரைட்
நெஞ்சுக்குள் மாமழை
திருச்சியில் காலேஜ் முடித்து விட்டு சென்னைக்கு திரும்புவார் சூர்யா.. அப்போதுதான் முதன் முறையாக சமீரா ரெட்டியை பார்ப்பார். சமீரா ரெட்டியின் அழகில் மயங்கி, உருகி அவர் செய்யும் மேனரிசனங்கள் இன்றளவும் இளைஞர்கள் பலர் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத சூர்யா டாய்லெட் அருகே சென்று ஆட்டம் போடும் காட்சி இன்று பார்க்கும் போது அவ்வளவு ப்ரெஷ்ஷாக இருக்கிறது.
சடாரென்று லவ்வை சூர்யா பிரோப்பஸ் செய்ய, சூர்யாவின் அதீத காதலால் சமீரா திகைத்து நிற்க, காதல் தழும்ப தழும்ப நெஞ்சுக்குள் மாமழை பாடலை உருவாக்கியிருப்பார் கெளதம் மேனன்.. என்னா மனுஷன்டா..
வாழ்க்கையை மாற்றிய பயணம்
காதல் தோல்வியில் போதை மருந்து எடுத்துக் கொள்ளும் போது, அப்பா வந்து விட வெளியே போங்க என்பார் சூர்யா. ஆனால் அதனை வலுக்கட்டாயாமாக பிடுங்கி அவரது தந்தை ஊசியில் இருந்த மருந்தை வெளியே கொட்டி விடுவார்.
இதனால் கோபமடைந்த சூர்யா தந்தையையே அடிக்க கை ஓங்க, இதனை பார்த்த சிம்ரன் திகைத்து போய் நிற்பார். அதன் பின்னர் அம்மாவும் அப்பாவும் மருந்து வாங்கச் செல்லும் சூர்யாவை தடுத்து நிறுத்துவதும், பொறுக்க முடியாமல் சூர்யா நாக்கை கடிப்பதும் என அதில் சூர்யா பெர்மாமன்ஸில் பின்னியிருப்பார். அதன் பின்னர் ஆசுவாசமடைந்த சூர்யாவிடம் அப்பா என்ன நடந்தாலும் ’லைஃப் ஹாஸ் டூ மூவ் ஆன் என அட்வைஸ் செய்ய, பயணம் மூலம் தன்னை உணர்வார் சூர்யா.. சூர்யாவின் பயணக் காட்சிகளும்.. அவர் தனனை உணரும் காட்சிகளும் இன்றும் நம்மை ஏதோ செய்து விடுகிறது.
எல்லா வலியும் போயிடும்
கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்றி நேஷனல் அவார்டு வாங்கிய சூர்யா, சமீராவின் இழப்பை மறக்க ஜிம்மிற்குள் நுழைவார்.. மொத்தமே 44 நொடிகள் ஓடக் கூடிய காட்சியில், இன்னைக்கும் என் ஜீனியர்ஸ் இதத்தான் சொல்றேன் உங்க உடம்ப ரெடி பண்ணுங்க.. எல்லா வலியும் போயுடும்னு” என்பார் சூர்யா.. இந்த 44 நொடி காட்சி இன்றைக்கும் பல இளைஞர்களை ஜிம்மிற்குள் நுழைய வைத்துக் கொண்டிருக்கிறது.