Vaadivaasal : விடுதலையில் வெற்றிமாறன் கவனம்.. ஓரம்போகும் வாடிவாசல்? - சூர்யா எடுத்த அதிரடி முடிவு..
வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கெனவே நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடிவாசல் படத்தில் இணைந்திருக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது.கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப்படத்தில் இருந்து, முன்னதாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், பேட்டி ஒன்றில் வெற்றிமாறன், காளை ஒன்றுடன் சூர்யா பழக வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
#VaadiVaasal Update🔥🔥@Suriya_offl @gvprakashhttps://t.co/N9Jwrl72PG pic.twitter.com/C1OxmwV0M2
— 🐈🖤 (@RazakSuriya) March 5, 2022
அதற்கான வேலையிலும் சூர்யா இறங்கியுள்ளார். இப்படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கெனவே நடைபெற்றது. இந்நிலையில் தற்போது வாடிவாசலுக்கு கேப் விட்டுள்ள வெற்றிமாறன், விடுதலை படத்தில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வெளியான தகவலின்படி, தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருப்பதாகவும் அதனால் வாடிவாசல் ஷூட்டிங் தற்போது இல்லை எனவும் கூறப்படுகிறது. வாடிவாசல் தள்ளிப்போவதால்,சூர்யாவும் வேறு ப்ராஜக்டில் தற்போது கவனத்தை செலுத்தியுள்ளாராம்.
#வாடிவாசல் #Vaadivasal pic.twitter.com/smEdgnavXL
— Vetri Maaran (@VetriMaaran) July 23, 2020
TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விடுதலை படத்தை முடித்து வெற்றிமாறன் வருவதற்குள் மற்ற வேலையை பார்க்கலாம் என சூர்யா திட்டமிட்டே இந்த ப்ளானில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ‘வாடிவாசல்’ படத்தை பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருந்த போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாமல் நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காக பாடல்கள் இருக்கும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்