(Source: ECI/ABP News/ABP Majha)
உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் எப்படி இருக்கு..? - ரசிகர்கள் கருத்து
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படம் இன்று ரிலீசானது. படம் குறித்த ரசிகர்களின் கருத்துகள் மற்றும் பல விமர்சனங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
LIVE
Background
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி( Nenjukku Neethi) படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தார்.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 20-ந் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இந்த படத்தை தமிழக முதல்வரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். அவருக்கு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பூங்கொத்து அளித்து வரவேற்றார். படத்தை பார்த்த பின்பு படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனிகபூர், ராகுல் மற்றும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் என அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை கூறினார்.
இந்த படத்தை பார்க்க வந்த மு.க.ஸ்டாலின் வெள்ளை நிற வேட்டி, சட்டையுடன் வராமல் நீல நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து இளைஞரைப் போல வந்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுகிறது. நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெயிலரும், டீசரும் ஏற்கனவே யூ டியூபில் வெளியாகி ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஆரி அர்ஜூனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தினேஷ்கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரூபன் எடிட் செய்துள்ளார். திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் கதைக்களம்..... படம் முழுக்க பாசிச எதிர்ப்பு...!
கோவை கதைக்களம், பொள்ளாச்சி சம்பவம், தீண்டாமை கொடுமை, ஜாதிய வன்மம். படம் முழுக்க பாசிச எதிர்ப்பு. அம்பேத்கரையும், பெரியாரையும் ஃப்ரேம் பை ஃப்ரேம் காட்டி நகரும் கதை.
அனைத்து டிக்கெட்டுக்களையும் புக்கிங் செய்த மானாமதுரை எம்எல்ஏ
உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் முன்பே அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார். டிக்கெட்கள் இலவசம் கைப்பேசி என்னுடன் அறிவிப்பு போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல்
‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்....!
இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.