மேலும் அறிய

அமேசான் பிரைம் காமெடி டிராமா சீரிஸ் லோக்கல் டைம்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள  ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ் லோக்கல் டைம்ஸ்

இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில்  ஜித்தின் துரை தயாரித்துள்ளார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

மார்ச் 13 ரிலீஸ் 

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது.  சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழைப் பின்னணியாகக் கொண்டது. Anekdotes உருவாக்கிய இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்; Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் முத்துரங்கன் எழுதிய இந்த சீரிஸை  அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. இணைந்து உருவாக்கியுள்ளனர். ‘லோக்கல் டைம்ஸ்’ மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.

ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள்  வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து.  வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான ‘நம்ம செய்தி’ பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர். இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது.

பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்

“லோக்கல் டைம்ஸ் என்பது  உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ஜித்தின் துரை  கூறுகையில்
 
“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்
 
“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம். 

இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்
 
“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள்.  அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை  ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ்  இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”

இந்த சீரிஸ்  மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திய பிரதேசங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Asha Bhosle: கர்ப்பமாக இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேற்றம்.. சோகம் நிறைந்த ஆஷா போஸ்லே வாழ்க்கை
Asha Bhosle: கர்ப்பமாக இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேற்றம்.. சோகம் நிறைந்த ஆஷா போஸ்லே வாழ்க்கை
Asha Bhosle World Record: 20 மொழிகளில் 12 ஆயிரம் பாடல்களா! ஆஷா போஸ்லே பற்றி இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
Asha Bhosle World Record: 20 மொழிகளில் 12 ஆயிரம் பாடல்களா! ஆஷா போஸ்லே பற்றி இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Tamil Songs: மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமிழில் பாடிய பாடல்களின் லிஸ்ட்
Asha Bhosle Tamil Songs: மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமிழில் பாடிய பாடல்களின் லிஸ்ட்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Manifesto: “சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
“சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
“லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Embed widget