Pathaan Disaster : 'பதான் படம் ஒரு பேரழிவு'... ட்வீட் மூலம் ஷாருக்கானை சீண்டிய இணையவாசி... என்ன நடந்தது ?
'பதான் திரைப்படம் ஏற்கனவே ஒரு பேரழிவு. நீங்கள் ஓய்வு பெற்றுவிடுங்கள்' என ஷாருக்கானை ட்ரோல் செய்து சீண்டி வருகிறார்கள்

மிகவும் பிரபலமான பாலிவுட் இயக்குனர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் பதான்.

சர்ச்சையில் சிக்கிய 'பேஷரம் ரங்' பாடல் :
இப்படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறது. வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள்,இந்துத்துவ கும்பல் என பலரும் பெரும் கண்டனங்களை எழுப்பிவரும் நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி அப்பாடலில் சில மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். தியேட்டர் ரிலீசுக்கு முன்னர் திருத்தப்பட்ட பதிப்பு சமப்பிக்கப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
Prasoon Joshi has thoroughly compromised his credibility by asking the makers of Pathan to make modifications to cater to so called audience sensibilities. A new low for India and CBFC to sanctify use of saffron colour in cinema pic.twitter.com/jLu1M6KQvW
— Ashok Pal Singh (@PalsAshok) December 30, 2022
ஷாருக்கானை கலாய்க்கும் ட்விட்டர் பயனாளர் :
இப்படி பெரும் சர்ச்சை சிக்கியிருக்கும் பதான் படம் பற்றி பல விமர்சனங்கள், ட்ரோல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிவருகிறது. அந்த வகையில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் பதான் திரைப்படத்தை 'பதான் திரைப்படம் ஏற்கனவே ஒரு பேரழிவு. நீங்கள் ஓய்வு பெற்றுவிடுங்கள்' என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நடிகர் ஷாருக்கான் "பேட்டா பதோன் சே ஐசே பாத் நஹி கர்தே" (நீங்கள் பெரியவர்களிடம் அப்படி பேசக்கூடாது) என அந்த ட்விட்டர் பயனாளருக்கு பதிலளித்து இருந்தார்.
Pathan disaster already
— Rowdy🇮🇳🚩 (@akki_lovers) January 4, 2023
Retirement lelo
Beta badhon se aise baat nahi karte!! https://t.co/G5xPYBdUCK
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
Thanks for reply
— Rowdy🇮🇳🚩 (@akki_lovers) January 4, 2023
Lekin sir aap to dar gaye😂 https://t.co/zogzqGj1ZP
ஷாருக்கானை ட்ரோல் செய்யும் பயனாளர்கள் :
ஷாருக்கானின் இந்த பதிலுக்கு அந்த ட்விட்டர் பயனாளர் " உங்களுடைய பதிலுக்கு நன்றி .ஆனால் நீங்கள் பயப்படுகிறீர்கள்" என பதில் அளித்துள்ளார். இந்த ட்விட்டர் போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.





















