TUDUM | Money Heist season, Stranger Things என உங்க ஃபேவரைட் நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ்களுக்கு அப்டேட்ஸ் வந்தாச்சு..!
TUDUM நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிமிருந்து கிட்டத்தட்ட 145 நட்சத்திரங்கள் பங்கேற்று அவர்களின் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டனர்
பிரபல Netflix நிறுவனம் முதல்முறையாக தனது ரசிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. Tudum என அழைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸ் யூடியூபில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீரிஸ், படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்பு வெளியானது. உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 145 நட்சத்திரங்கள் பங்கேற்று அவர்களின் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டனர். இந்தியாவில் ராதிகா ஆப்தே, தமன்னா, மல்லிகா தீக்ஷித் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று அவர்களின் அடுத்த படம் குறித்த விவரங்களை வெளியிட்டனர். அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் சில வெப் சீரிஸ் மற்றும் படங்களின் வெளியீட்டு தேதியும் வெளியாகியுள்ளது.
Stranger Things 4
பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Stranger Things 4 சீசன் குறித்த புதிய டீசர் இடம்பெற்றிருந்தது. அதில் கிரீல் ஹவுஸ்ஸில் 1950 களில் விக்டர் கிரீ தனது குடும்பத்தையே கொலை செய்கிறார். அவர்தான் முந்தைய சீசன்களில் மனநல மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருந்த நபர். அவர் ஏன் கொலை செய்தார், அந்த வீட்டில் ஏன் அப்படியான மர்மம் நிலவுகிறது என்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், உள்ளது இந்த புதிய டீசர். இதன் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை ஆனால் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Stranger Things Season 4 introduces Creel House & #TUDUM just gave you the first peek inside. pic.twitter.com/PbMfo9e87r
— Netflix (@netflix) September 25, 2021
Money Heist season 5 ‘Volume 2'
இது குறித்த அறிவிப்பை Álvaro Morte (professor ) வெளியிட்டார். அதில் அடுத்த சீசனின் ஸ்னீக் பீக் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் கொள்ளையர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது புரஃபஸர் காணாமல் போய்விட்டார் என கூறி , விவாதத்தில் ஈடுபடுகின்றனர். முதல் வால்யூமில் டோக்கியோ இறந்ததோடு முடித்தார்கள். அது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் டுடும் Money Heist season 5 ‘Volume 2' ஆனது வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
It’s all led to this. #TUDUM just debuted an exclusive clip from La Casa de Papel/Money Heist Part 5. Vol 2, premiering December 3! pic.twitter.com/Zz4GsQVdL3
— Netflix (@netflix) September 25, 2021
The Witcher season 2
TUDUM நிகழ்ச்சியில் The Witcher வெப் சீரிஸின் நாயகிகள் ஹென்றி கேவில் மற்றும் லாரன் ஷ்மிட் ஹிஸ்ரிச் ஆகியோர் தோன்றி The Witcher season 2-இன் இரண்டு கிளிப்களை வெளியிட்டனர். அந்த வீடியோவை பார்க்கும் பொழுது சீசன் 3 நிச்சயமாக உள்ளது என்பது புலப்படுகிறது. இது வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் டிரைலரையும் நாம் எதிர்பார்க்கலாம்.
Would you like another clip from The Witcher Season 2?
— Netflix (@netflix) September 25, 2021
Maybe one with Geralt and Ciri? #TUDUM has you covered! pic.twitter.com/V0g2bu7dHa
Vikings
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட Vikings -இன் அடுத்த சீசன் டிரைலர் டுடும் நிகழ்ச்சியின்பொழுது வெளியிடப்பட்டது. டிரைலரை பார்க்கும்பொழுது முந்தைய சீசனை விட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. நிச்சயமாக விஷுவல் ட்ரீட்டாகவும் இருக்கும் . வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால் அடுத்த வருடம் ரிலீஸாவது கண்ஃபார்ம்.
The Vikings have returned and they will take no prisoners. Get your first look at the highly anticipated Vikings Valhalla #TUDUM pic.twitter.com/ycZHBK0plz
— Netflix (@netflix) September 25, 2021
Extraction 2
இந்திய சிறுவனுக்கு பாதுகாப்பாக Chris Hemsworth அதிரடி காட்டும் படமாக Extraction முதல் பாகம் உருவாகியிருந்தது. முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் Chris Hemsworth துப்பாக்கியால் துளைக்கப்பட்டு தண்ணீரில் விழுவது போல படத்தை முடித்திருப்பார்கள். தண்ணீரில் விழுந்த அவர் இறக்கவில்லை மீண்டும் கண் திறக்கிறார். அப்போ அடுத்த அதிரடிக்கு தயாராகுங்கள் என்பதுதான் அர்த்தம். Extraction 2 முன்பை விட கூடுதல் ஆக்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ரிலீஸ் விவரங்களை தெரிவிக்கவில்லை.
Tyler lives!
— Netflix (@netflix) September 25, 2021
Chris Hemsworth just revealed at #TUDUM that he will return for Extraction 2 pic.twitter.com/NzdIIG4xEF
Red notice
Dwayne Johnson, Ryan Reynolds, Gal Gadot உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரெட் நோட்டீஸ் படத்தின் முன்னோட்ட காட்சிகள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. Dwayne Johnson, Ryan Reynolds மற்றும் Gal Gadot ஆகிய மூவரும் அவரவர் துறையில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் இணைந்து எப்படி எதிரியை வீழ்த்தி தங்கள் லட்சியத்தை அடைகிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை இந்த படம் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
It’s Gal Gadot vs. Dwayne "The Rock" Johnson and Ryan Reynolds in the kick-ass fight scene of your dreams. Watch #TUDUM’s exclusive sneak peek at Red Notice pic.twitter.com/U0Bt3xSgeI
— Netflix (@netflix) September 25, 2021