மேலும் அறிய

Tovino Thomas: உலகம் பாராட்டும் உள்ளூர் ஹீரோ.. சிறந்த ஆசிய நடிகருக்கான பரிந்துரையில் டொவினோ தாமஸ்!

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.

சர்வதேச திரைப்பட விருது நிகழ்ச்சியான செப்டிமியஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.

டொவினோ தாமஸ்

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ். மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா முதலிய படங்களின் மூலம் மலையாள ரசிகர்கள் தாண்டியும் கவனமீர்த்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’ இந்தியா முழுவதிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவானது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் 2018 திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் ’இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி” என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.

 சிறந்த நடிகர்

ஆஸ்கர் விருதைப் போல் முக்கியமான மற்றொரு விருது என்றால் செப்டிமியஸ் திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் நெதர்லாந்தில் நடைபெறும் இந்த விருது நிகழ்ச்சியில் சர்வதேச திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கானப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். இந்த விருதிற்கு தேர்வாகும் முதல் தென்னிந்திய நடிகர் டொவினோ தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாளத் திரையுலக பிரபலங்கள் டொவினோ தாமஸுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தேசிய விருதின் பல்வேறு பிரிவுகளின் கீழ் டொவினோ  நடித்த மின்னல் முரளி திரைப்படம் பரிந்துரைகளில் இருந்தும் எந்த விருதும் படத்திற்கு வழங்கப்படாடததால் வருத்தமடைந்திருந்த ரசிகர்கள் இந்தத் தகவலினால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

வெளிவரவிருக்கும் படங்கள்

தற்போது டொவினோ தாமஸ் நடிகர் திலகம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகிய படங்களை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரான டேவிட் படிக்கல்லின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து டொவினோ தாமஸ் ஏ.ஆர்.எம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். டொவினோ தாமஸின்  முதல் பான் இந்தியத் திரைப்படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் 1900, 1950, 1990 என மூன்று காலங்களைச் சேர்ந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாசில் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து கவனமீர்த்த மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget