பாப்கார்ன் எடுத்துக்கோங்க, OTT கேலண்டர ரெடி பண்ணிக்கோங்க.. டாப் 5 எக்சைட்டிங் மூவிஸ் இங்க இருக்கு..

ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதற்காக பல்வேறு படக்குழு நிறுவனங்கள் ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதற்காக பல்வேறு படக்குழு நிறுவனங்கள் ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் விரைவில் வெளியாக இருக்கும் டாப் 5 எக்சைட்டிங் இந்திய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

1. ரகிட ! ரகிட ! ரகிட‌தனுஷ் நடிப்பில், கார்த்தில் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் ஜகமே தந்திரம், இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு நகர்வதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற ஜூன் 18-ஆம் தேதி  நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கும் நிலையில், தனுஷ் குரலில் "நேத்து" என்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டாகி உள்ளது. ஏற்கனவே  எனக்கு ராஜாவாக, புஜ்ஜி போன்ற இப்படத்தின் பாடல்கள் இணையத்தை கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2. கேர் ஆஃப் வித்யா பாலன்பாப்கார்ன் எடுத்துக்கோங்க, OTT கேலண்டர ரெடி பண்ணிக்கோங்க.. டாப் 5 எக்சைட்டிங் மூவிஸ் இங்க இருக்கு..

வித்யா பாலன் நடிப்பில் டி சீரிஸ் தயாரிப்பில், அமித் மசுர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ஷெர்னி". இந்த படம் வருகிற ஜூன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. வனங்கள் மற்றும் வனவிலங்குகளை மனிதர்களிடன் இருந்து  பாதுகாக்கும் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வித்யா பாலன்.  கையில் வாக்கி டாக்கியுடன் நிற்கும் வித்யாபாலனை குறிபார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . விறுவிறு கதைக்களத்தோடு படம் ஹிந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

3. நாக் அவுட் !பாலிவிட்டில் செம ஹிட் அடித்த "பாக் மில்கா பாக் " என்ற திரைப்படத்தின் கதாநாயகன் "ஃபர்கான் அக்தர்" நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டூஃபான்". இந்த படம் கோமாளியாக சுற்றித்திரியும் ஒருவன் எப்படி குத்துச்சண்டை வீரன் ஆகிறான் என்ற  ஒன்லைனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காட்சிகளை டெல்லி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த மாதம் (மே) 23-ஆம் தேதி  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , சில காரணங்களால் பட வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக படத்தின் கதாநாயகன் தெரிவித்துள்ளார்

4. குடும்ப தலைவரு !அமேசான் பிரைமில் முன்னதாக வெளியான ஃபேமிலிமேன் சீரிஸின் அடுத்தபாகம் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சமந்தா ஈழ தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். ட்ரைலரை கண்ட பலரும் படத்தில் ஈழ தமிழர்களை  வில்லன்களை போல் சித்தரிப்பதாக உள்ளது என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் படத்தின் கதாநாயகன் மனோஜ் பாஜ்பாய் , தமிழர்களை மதிக்கும் வகையில்தான் இந்த திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து படத்தை பார்த்து முடிவெடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரச்சனை காரணமாகவே ஃபேமிலிமேன் 2 சீரிஸ் மீதான‌ எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

5. சறுக்கு விளையாட்டு!"ஸ்கேட்டர் கேர்ள்" இந்த திரைப்படம் இந்தியன்-அமெரிக்கன் ட்ராமாவாக எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கேட்டர் போர்ட் விளையாட்டு குறித்து அறியாத சிறுமி ஒருத்தி, பலகையில் அதனை உருவாக்கி விளையாடுகிறார். அந்த ஆர்வத்தை கண்ட அமெரிக்க பெண் ஒருவர் அந்த பகுதி சிறுவர்களுக்கு ஸ்கேட்டர் போர்டை பரிசளிக்கிறார். அதனை வாங்கிய சிறுமி எப்படி இடையூறுகள் தாண்டி சாதனை படைக்கிறாள் என்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த படம். ஸ்கேட்டர்  கேர்ள் அடுத்த ஜூன் 11-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

Tags: Netflix OTT amazon family man 2 Jagame Thandhiram Skater Girl Toofaan Sherni

தொடர்புடைய செய்திகள்

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு