‛உங்களுக்கு டாம் குரூஸ்னா... எங்களுக்கு மம்மூட்டி...’ அறுவதா... எழுவதா... அடித்துக்காட்டிய ரசிகர்கள்!
Mammootty 71 : "சினிமா இன் மீம்ஸ்" தனது ஃபேஸ்புக் கணக்கில் ஹாலிவுட் ஆக்டர் டாம் குரூஸின் புகைப்படம் வெளியிட்டுள்ளது. மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் ரசிகர்கள் கமெண்ட்களை அடுக்கி வருகின்றனர்.
Mammootty is still young : மம்மூட்டி "ஜஸ்ட் 71 " பட் ஸ்டில் யங் - டாம் குரூஸுடன் போட்டி
"சினிமா இன் மீம்ஸ்" தனது ஃபேஸ்புக் கணக்கில் பிரபலமான ஹாலிவுட் ஆக்டர் டாம் குரூஸின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டிற்கு மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை அடுக்கி வருகின்றனர்.
மம்மூட்டி ரசிகர்கள் அள்ளிக்குவித்த மீம்ஸ்:
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி தனது 71 வயதிலும் டாம் குரூஸுக்கு கடுமையான போட்டியாக உள்ளார். அதற்கு ஆதாரமாக நடிகர் மம்மூட்டியின் சில புகைபடங்களை பகிர்ந்துள்ளனர். 60 , 70 வயதுகளில் இளமையாக தோற்றமளிப்பது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யப்பட்டு 60 வயதிலும் அவர் இளமையான தோற்றத்தை பாராட்டியது.
மம்மூட்டி ஜஸ்ட் 71 :
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் குறிப்பாக மலையாள திரையுலக ரசிகர்கள் அதற்கு ஒரு பதிலாக மம்மூட்டியின் புகைப்படங்களை போஸ்ட் செய்து அதற்கு "ஜஸ்ட் 71 வயது" என்று மீம்ஸ் மற்றும் கமெண்ட்களால் நிரப்பினர். அதில் ஒரு ரசிகர் "எங்கள் பெருமை.. இந்தியாவின் பெருமை... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மம்முட்டி தனது 70களில் இருக்கிறார்" என்ன பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இன்றும் என்றும் இளமை தோற்றம்:
50 வருட திரை பயணத்தில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்த விட்டார் மம்மூட்டி. மூன்று தேசிய விருதுகள், இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்கள், ஒரு பத்மஸ்ரீ விருது பெற்றும் இன்றும் இந்த சூப்பர் ஸ்டார் வருடத்திற்கு ஐந்து முதல் ஏழு படங்களில் பிஸியாக இருக்கிறார். அவரின் வயது அதிகரித்தாலும் இளமையாகி கொண்டே இருக்கிறார். அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ச்சியாக நடிப்பதால் தனது இன்ஸ்டாகிராம் கணக்குகளில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பகிரவும் செய்கிறார் இந்த இளைஞர். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக செய்ய கூடியவர்.