மேலும் அறிய

வெளியானது அகத்தியா திரைப்படத்தின் டைட்டில் லோகோ - வீடியோ

ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் "அகத்தியா"

"அகத்தியா" திரைப்படத்தின்  டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது.

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா".

"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில்,  திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். 

மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது - நான்கு மொழிகளில் அற்புதமான  சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

வெளியானது அகத்தியா திரைப்படத்தின் டைட்டில் லோகோ - வீடியோ
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படம் குறித்துப் பகிர்ந்துகொண்டதாவது... "திகில்-த்ரில்லர் ஜானர்  நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, 'அகத்தியா' மூலம் இந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.  பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு  சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். 'அகத்தியா' கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.

2025 ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும்  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget