'காலம்'தான் வில்லன்… இன்று முதல் ஹீரோ ஆனார் சாண்டி... 3:33 திரைப்படம் ரிலீஸ்!
இந்தப் படம் காலப் பயணம் சார்ந்த திகில் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று பெரும்பான்மை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் நிறைய பிரபலமான ஆல்பம் பாடல்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றிய இவர் பல முன்னணி திரைப்படங்களிலும் வேலை செய்தார், பல பாடல்கள் இவர் தோன்றுவதாலேயே ஹிட் ஆனது.
பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமானார். 3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் காலப் பயணம் சார்ந்த திகில் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.
Have a Great Horror Experience by watching #MoonuMuppathiMoonu in theatres from Tomorrow
— SANDY (@iamSandy_Off) December 9, 2021
Tickets Booking is open 🤩@menongautham @iamSandy_Off @Bamboo_Trees @ProducerJeevi @NAMBIKAICHANDRU @sathishmanohara @rameemusic @DeepakDFT @Shruthiselvam_ @reshupasupuleti @divomusicindia pic.twitter.com/oMvhaFuTbR
படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு வீட்டின் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சதீஷ் மனோஹரன் பணியாற்றுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ளது. மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவுன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.