HBD A.R Rahman | ஏ.ஆர்.ரஹ்மானின் THUG LIFE மொமண்ட்ஸ் ! - பிறந்தநாள் ஸ்பெஷல்!
அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பல இடங்களில் அதிரடி காட்டியிருக்கிறார்.
கோலிவுட் , பாலிவுட், ஹாலிவுட் என கொடிக்கட்டி பறப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ஆர் அதிகம் பேசாதவராக இருந்தாலும் , அவ்வப்போது அவர் கொடுக்கும் பதில்களும் செயல்களும் THUG LIFE என கொண்டாடப்படும். அப்படியான சில சம்பவங்களை பார்க்கலாம்.
தமிழ் தெரியுமானு கேட்டேன்ல ?
ஏ.ஆர்.ரஹ்மான் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்த போதிலும் , கடந்த ஆண்டு 99 சாங்ஸ் என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி , அதனை தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இகான் என்னும் பாலிவுட் நடிகரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற பொழுது, தொகுப்பாளர் ஒருவர் இந்தியில் பேசி நடிகர் இஹானை வரவேற்க , “ இந்தியா ?” என குறுநகைத்தவாறு மேடையில் இருந்து இறங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் தொகுப்பாளரிடம் “ இதுக்காகத்தான் முன்னதாகவே தமிழ் தெரியுமா எனகேட்டேன் “ என வேடிக்கையாகவும் கேள்வி எழுப்பினார். பாலிவுட்டில் பணியாற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி மொழியால் சில அவமானங்களை சந்தித்திருக்கிறார்.
Hindiii?? Smiles and walks away 😂😂 Thug life @arrahman pic.twitter.com/7KLkNkgs3r
— Kathii Ben🔪🔪🔪 (@johnywalker96) December 27, 2021
நல்ல ஹெட்ஃபோன் வாங்குனா கேட்கும்!
சென்னையில் Tha Future என்னும் அமைப்பை தொடங்கியிருந்தார், அப்போது நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ” பழைய பாடல்களில் வரிகள் தெளிவாக இருந்தது, சாமனியர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது..இப்போது ஏன் அப்படி இருப்பதில்லை “ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏஆர்.ரஹ்மான் “நல்ல சிஸ்டம் வாங்கிக்கோங்க கேட்கும்.. இல்லைனா ஹெட்போன் போட்டு கேட்டா புரியும்” என சுவாரஸ்யமாக பதிலளித்திருந்தார்.இது அங்கிருந்தவர்களை சிரிப்பலைகளில் ஆழ்த்தியது. மேலும் பதிலளித்த அவர் “ இசையை வேறு கோணங்களில் ரசிகர்களுக்காக படைக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு உருவாக்கப்படுகிறது. வரிகள் தெளிவாக இருக்கும் பாடல்களும் இருக்கிறதே “ என்றார்.
Hahaha thug life 😂😂😂😂@arrahman pic.twitter.com/ETUnfF9q6V
— manoj kumar (@manoj_kumar0706) January 8, 2020
இந்தி நாயகனுக்கு தமிழில் விருது!
கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களை கவுரவிக்கும் விதமாக சிங்கப்பூரில் IFFA விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்தி மொழியில் சிறந்த நடிகருக்கான விருதை வழங்க ஏஆர்.ரஹ்மான் அழைக்கப்பட்டிருந்தார். எல்லா மொழிகளுக்கும் பொதுவான விருது என்பதால் ஆங்கிலத்திலேயே உரையாடல்கள் இருந்த நிலையில் , விருதை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் “ இந்த iffa சிறந்த நடிகருக்கான விருது , ரன்பீர் கபீர் அவர்களுக்கு “ என அறிவித்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Thug life @arrahman #Rahmanism #ARR #ARRahman pic.twitter.com/mEKaXFah13
— முத்து (@Sai_MuthuRaman) October 30, 2021
சல்மான்கான் எனக்கு பிடிச்சமாதிரி படம் பண்ணட்டும்!
ரானக் என்னும் ஆல்பம் பாடல் வெளியீட்டில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க , அதில் சல்மான் கானும் கலந்துக்கொண்டார். அப்போது சல்மான் கான் ஏ.ஆர்.ரஹ்மானை இவர் சாதரணமான இசையமைப்பளர்தான் என கூற அதனை புன்னகையோடு ஏற்றுக்கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு கைக்கொடுக்க வந்த சல்மான்கானிற்கு கைக்கொடுக்காமல் பாக்கெட்டில் கைகளை வைத்துக்கொண்டு எடுக்க மறுத்தார். அதன் பிறகு சல்மான்கான் படத்திற்கு எப்போது இசையமைக்க போகிறீர்கள் என கேள்வி கேட்ட பொழுது "அவர் எனக்கு பிடித்த மாதிரி , எப்போது படம் செய்கிறாரோ அப்போதுதான் “ என பதிலளித்தார்.
ரொம்ப கேள்வி கேட்காதீங்கப்பா!
அர்னாப் கோ ஸ்வாமி நேர்காணல்கள் பலருக்கு பரீட்சியம் அதில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் சில பாடல்களை பாட வேண்டுகோள் வைக்கப்பட்டது. அப்போது பாடிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாடலின் வரிகள் சரியாக தெரியாமல் போகவே , எனக்கு பாடலின் வரிகள் நினைவில்லை என்றார். அதற்கு அர்னாப் “உங்களை விட எனக்கு நிறைய பாடல் வரிகள் தெரியும் என பதிலளித்தார். அதனை அமைதியாகவே கேட்டுக்கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அடுத்தடுத்து பாடல்கள் பாடிய படி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேள்வி கேட்க, அதனை எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருந்தவரின் , உங்களிடம் நான் அதிகமாக பேசுகிறேனோ என கேட்டார் அர்னாப் . அதற்கு சற்று யோசிக்காதவராய், “ஆமாம் “ என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசை ஞானியின் இசையில் ஏஆர்.ரஹ்மான் !
கடந்த ஆண்டு நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் , புன்னகை மன்னன் படத்தின் தீம் மியூசிக்கை தனது மொபைலில் வாசித்து அசத்தினார். அதன் பிறகு கீபோர்டில் வாசித்து காட்டியபோது அரங்கமே கர ஒலியால் அதிர்ந்தது.இசைஞானியையும் இசைபுயலையும் ஒரே மேடையில் பார்க்க வேண்டும் என்பதுதான் இசை பிரியர்களின் விருப்பம். இந்த நிலையில் இளையராஜாவின் இசையை , ஏஆர்.ரஹ்மான் வாசித்தால் சொல்லவா வேண்டும்.