Silambarasan : டைநோசர்ஸ் இயக்குநருடன் கைகோர்க்கும் சிலம்பரசன்...எஸ்.டி.ஆர் நெக்ஸ்ட் அப்டேட்ஸ்
கடந்த ஆண்டு டைனோசர்ஸ் படத்தை இயக்கிய எம் ஆர் மாதவன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலம்பரசன்
மாநாடு படத்தின் மூலம் கோலிவுட் உலகில் வெயிட்டான கம்பேக் கொடுத்து அடுத்தடுத்த படங்களில நடித்து வருகிறார் சிம்பு. தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்தபடியாக தேசிங்கு பெரொயசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.
நம்ம உடம்புதான் முக்கியம்
சமீபத்தில் இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்ட சிம்பு பேசியது அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "எல்லாரும் நான் தான் ஏதோ பெரிய ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகிட்டேன்னு சொல்றாங்க. ஆனால் இது ஆன்மிகம் சம்பந்தபட்ட விஷயம். நம்ம கூட இருக்க எல்லாருமே நம்மள விட்டு போயிடுவாங்க ஆனால் கடைசிவர நம்ம கூட இருக்கது நம்ம உடம்பு மட்டும் தான். அதனால் அத நம்ம மதிக்கணும்" என்று சிம்பு பேசியிருந்தார்.
எஸ்.டி.ஆர் நெக்ஸ்ட் அப்டேட்
Simbu may collaborate with Director M. R. Madhavan, known for 'Dienosirs,' after #STR48 and #ThugLife.
— Mix Show (@MixShow1016584) June 7, 2024
Source: https://t.co/49KfV6pqre#atman #str #silambarasantr #simbu #kamalhaasan #TRsilambarasan #thuglife pic.twitter.com/S71BLNsU1L
தக் லைஃப் மற்றும் எஸ்.டி.ஆர் 48 படங்களைத் தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டைனோசர்ஸ் படத்தை இயக்கி கவனமீர்த்த எம்.ஆர் மாதவன் நடிகர் சிலம்பரசனிடம் கதை சொல்லி இருப்பதாகவும் இந்த கதை சிம்புவுக்கு பிடித்து இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.