Sunny Leone Birthday: ‛ஒதுக்கிய சமூகம் என்னை ஏத்துக்கும்’ - சன்னி லியோன்
பல விருதுகள் சன்னிக்கு கிடைக்கும் இதே நேரத்தில் பல அவமானங்களும் சன்னியை தேடி வருகிறது. இதுக்கு இடையில சன்னிக்கு நேட் எனும் காதலன் கிடைக்க இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், நேட் தன்னை காசுக்காக மட்டுமே காதலித்தார் என்பதை புரிந்து கொண்ட சன்னி தன்னுடைய திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
தனக்கு நடந்த துரோகம், வலி, வேதனை இதெல்லாம் கடந்து ஒரு சிலரால்தான் வாழ்க்கையோட லட்சியத்தை அடைய முடியும். முக்கியமா, ஒரு பெண் தன்னுடைய சுயத்தை விட்டுட்டு இந்த உலகத்துல போராடுறதே கஷ்டம். இங்கே தன்னுடைய கற்பையும் விட்டு கொடுத்து பலருடைய நெக்ட்டிவ் வைப்ல தன்னை போராடி மீட்டு இன்னைக்கு பலருக்கும் பாஸ்ட்டிவ் பெண்ணை இருந்து வர்ற மனுஷிதான் சன்னி லியோன். பலரும் இவரை பான் ஸ்டாரா பார்த்தப்போ இதுல இருந்த எல்லா கட்டமைப்பும் உடைச்சிட்டு தானொரு நல்ல மனுஷினு பலருக்கும் புரிய வெச்சிருக்காங்க சன்னி.
கனடாவுல 1981 ஆம் ஆண்டு பிறந்தவங்கதான் சன்னி. சன்னி கூட பொறந்தது சந்தீப் வோரா எனும் இளம் வயது தம்பி. அடிப்படையில் பஞ்சாப்பின் சீக்கிய குடும்பத்தை சேர்ந்தது இவங்க குடும்பம். கனடாவுல இண்டோ கனடியன்ஸ் என்று அழைக்கப்படும் குடும்பத்தை சேர்ந்தது சன்னியோட குடும்பம். சின்ன வயசுல இருந்தே தன்னை ஒரு டாம் பாய் ரேஞ்சுல வாழ்ந்து வளர்ந்து வந்தாங்க. கூச்சம் சுபாவம் கொண்ட சன்னி ஸ்கூல்ல பசங்க கூட இருக்குற நேரத்தை விடவும் வீட்டுல தம்பியோட நேரத்தை செலவழிக்கவே விரும்புனாங்க. சின்ன வயசுல இருந்தே சன்னியோட குடும்பம் வறுமையில வாட, வீட்டு கஷ்டத்தை போக்க பார்ட் டைம் ஜாப்புக்கு போக முடிவு எடுக்குறாங்க சன்னி.
டீன் ஏஜ் வயசுல எல்லாருக்கும் வரகூடிய காதல் சன்னிக்கும் வர ஒரு பையனை காதலிக்குறாங்க. ஆனா, சன்னி காதலனுடன் இருக்குறதை பார்த்துட்டு சன்னியோட அப்பா கண்டிக்க வீட்டுக்கு தெரியாம அடிக்கடி பார்ட்டிக்கு செல்ல விரும்புறாங்க சன்னி. இப்படி ஒருநாள் பார்ட்டிக்கு சன்னி போயிட்டு வர்றப்போ ஒரு அதிர்ச்சியான செய்தி வீட்டுல காத்துக்கிட்டு இருக்கு.
மது போதையில சன்னியோட அம்மா இருக்க, சன்னியோட அப்பாவுக்கு வேலை போயிருக்கு. இதுல இருந்து தன்னை மீட்டெடுக்க சன்னி போராடுறாங்க. பல பார்ட் டைம் வேலையை சன்னி தேட நண்பனின் அம்மா மூலமா மாடலிங் வேலை சன்னியை தேடி வருது. தன்னுடைய முதல் மாடலிங் ஷூட் உள்ளாடை விளம்பரம். கொஞ்சமும் யோசிக்கமா எல்லார் முன்னாடியும் நின்னு போஸ் கொடுக்கிறார் சன்னி. இந்த வேலையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் சன்னி. ஏனென்றால், வேற எந்த வேலையில கிடைக்காத சம்பளம் சன்னிக்கு இதுல கிடைக்குது. இதுமட்டுமில்லாம அடல்ட் போர்ன் படங்கள்ல நடிக்குற வாய்ப்பும் சன்னிக்கு தேடி வர இதுக்கு சம்மதம் தெரிவித்து ஸ்பெயின் போர்ட்ன் ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் சன்னி.
சன்னியின் இந்த வகையான படங்களும், விளம்பரங்களும் சன்னியோட குடும்பத்தில் இருப்பவரை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்க மிகவும் உடைந்து போகிறார் சன்னி. பல விருதுகள் சன்னிக்கு கிடைக்கும் இதே நேரத்தில் பல அவமானங்களும் சன்னியை தேடி வருகிறது. இதுக்கு இடையில சன்னிக்கு நேட் எனும் காதலன் கிடைக்க இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், நேட் தன்னை காசுக்காக மட்டுமே காதலித்தார் என்பதை புரிந்து கொண்ட சன்னி தன்னுடைய திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
இப்படி பல கஷ்டங்களை தாண்டிய சன்னிக்கு இந்தி பிக்பாஸ் ஷோதான் வேற மாதிரியான அடையாளத்தை கொடுத்தது. பான் ஸ்டாரான சன்னி இந்த ஷோவுக்கு வந்ததிலிருந்தே பலருடைய பார்வையும் சன்னிக்கு வேற மாதிரியான இமேஜ்யை கொடுத்தது. முக்கியமாக அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த சஞ்சய் தத்திடம் 'நான் என்னைக்கும் பான் ஸ்டாராக இருந்ததுக்கு வெட்கப்படல'னு ஓப்பனா சன்னி பேசுனாங்க. முக்கியமாக இந்திய கலாச்சரத்தின்படி சன்னி லியோன் இந்த நிகழ்ச்சியில தொடர கூடாதுனு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளையும் தெரிவிக்க ஆரம்பிச்சாங்க.
பைனலி இந்த நிகழ்ச்சில இருந்து வெளியேறிய சன்னி கண்டிப்பா இந்த சமூகம் என்ன ஏத்துக்கும்னு சொன்னாங்க. சன்னியை இன்னைக்கு இந்த சமூகம் ஏத்துக்கிட்டாங்க. தன்னுடன் வேலைப் பார்த்த டேனியலை திருமணம் செஞ்சிக்கிட்ட சன்னிக்கு மூன்று குழந்தைகள். கவுர் எனும் மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலரும் கஷ்டப்பட்டு வரும் வேளையில் பத்தாயிரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினார் சன்னி. இதுமட்டுமில்லாமல் பல தரப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ படுக்கைகளையும் ஏற்படுத்தி கொடுத்த சன்னி தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை எல்லோரின் வாழ்த்துகளுடம் கொண்டாடி வருகிறார்!