Ajithkumar: அஜித்தின் Good Bad Ugly படம்.. இதற்கு முன் இதே பெயரில் ரிலீசாகியுள்ள படங்கள்!
அஜித்தின் 63வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்துக்கு Good Bad Ugly என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்தின் டைட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படம் டைட்டில் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
Good Bad Ugly
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்துக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விடா முயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அஜித்தின் 63வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கியுள்ளது. இதில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இப்படியான நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விவாதமான டைட்டில்
இந்நிலையில் இப்படத்துக்கு Good Bad Ugly என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமிக்கிறார். மேலும் Good Bad Ugly படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. தொடர்ச்சியான படம் வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
ஒரே பெயரில் மூன்று படங்கள்
1966 ஆம் ஆண்டு செர்ஜியோ லியோன் இயக்கத்தில் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட், எலி வாலச், லீ வான் கிளிஃப் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “The good, THe Bad, The Ugly". இந்த படம் கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி பயணப்படும் 3 பேரை பற்றியது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தது. இந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை தான் கார்த்திக் சுப்பராஜ் தனது ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக காட்டியிருப்பார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் Good Bad ugly என்ற பெயரில் படம் ஒன்று வெளியானது. ஸ்ரீஜித் விஜய், மோகனா ராஜ், சஞ்சு, இந்திரன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் 3 இளைஞர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றியது. இப்போது 3வதாக இதே பெயரில் அஜித் நடிக்கும் படம் உருவாகவுள்ளது.