மேலும் அறிய

The Substance : உலகமே பாராட்டும் தி சப்ஸ்டன்ஸ் திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம்...எதில் தெரியுமா ?

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள சப்ஸ்டன்ஸ் திரைப்படத்தை ரசிகர்கள் இலவசமாக முபி ஓடிடி தளத்தில் பார்க்கலாம்

தி சப்ஸ்டன்ஸ்

உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் 'The Substance'. ஃபிரெஞ்சு இயக்குநர் கோராலி ஃபார்கீட் இயக்கியிருக்கும் இப்படத்தில் டெமி மூர் மற்றும் மார்கரட் குவாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் . சர்வதேச திரையரங்குகளில் வெளியாகி தற்போது இந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

எலிஸபெத் ஸ்பாகிள் என்கிற நடிகை புகழின் உச்சத்திற்கு சென்று பின் காலப்போக்கில் மக்களால் மறக்கப்படுகிறார். தொலைக்காட்சியில் ஃபிட்னஸ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் எலிஸபெத் தனக்கு வயதாகிவிட்டதால் வேறு ஒரு மாடலை சேனல் தேடி வருவதை தெரிந்துகொள்கிறார். இப்படியான நிலையில் தான் தி சப்ஸன்ஸ் பற்றி அவருக்கு தெரிய வருகிறது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் தனது இளமை உருவத்தை எலிஸபெத் மீண்டும் பெறலாம். ஆனால் அவர் ஒரு வாரம் காலம் இளமையான உடலிலும் இன்னொரு வாரம் வயதான உடலோடும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக வைக்கப்படுகிறது. இளமையில் கச்சிதமான உடலோடும் அழகோடு இருக்கும் எலிஸ்பெத் மீண்டும் புகழ்ச்சியின் போதையை அனுபவிக்கிறார். மறுபக்கம் இன்னொரு வாரம் வயதான தனது உடலோடு என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார். ஒவ்வொரு முறை தனது இளமை உருவத்திற்கு திரும்பும்போது தனது வயோதிக உடலை எலிஸபெத் வெறுக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கே எதிராக அவரது செயல்கள் மாறுகின்றன. 

பொழுதுபோக்குத் துறை பெண்களின் உடல்மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் மிகை கற்பிதங்களை பற்றிய அரசியலை மிக ரத்தமும் சதையுமாக பேசுகிறது தி சப்ஸ்டன்ஸ் படம். ரத்தமும் சதையும் என்றால் வெறும் உவமைக்காக சொல்லவில்லை. பெண்களின் உடல் மீதும் அழகைப் பற்றி என்னவெல்லாம் பொதுவரையறைகள் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் வெறுக்கும் அளவிற்கு கோரமான உடல் சித்தரிப்புகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. மனவலிமை குறைவானவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதே நேரம் இதே குழந்தைகள் பார்க்க உகந்த படம்.  இல்லை.

தி சப்ஸ்டன்ஸ் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள அதிகப்படியான வரவேற்பு காரணமாக முபி ஓடிடி தளம் இந்த படத்தை ஒரு வார காலத்திற்கு இலவசமாக பார்க்க வழங்கியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
TVK Vijayabaskar : மாவட்ட செயலாளர் என்ன.. மண்டல பொறுப்பையே தூக்கி கொடுக்கும் விஜய்.? குஷியில் விஜயபாஸ்கர்ஸ்
மாவட்ட செயலாளர் என்ன.. மண்டல பொறுப்பையே தூக்கி கொடுக்கும் விஜய்.? குஷியில் விஜயபாஸ்கர்ஸ்
Renault Kwid Best Variant: தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
Embed widget