Anushka Shetty : யோகா டீச்சர் டூ நடிகை.. ஸ்வீட்டி என்ற பெயர் அனுஷ்காவாக மாறிய காரணம் என்ன? மனம் திறந்த அனுஷ்கா!
நான் படக்குழுவுடன் அமர்ந்து ஒரு பெயரை தேர்வு செய்தேன் . அது இந்தி நடிகர் சோனு சூத் எனக்காக தேர்வு செய்திருந்தார். ஆனால் அது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
அனுஷ்கா ஷெட்டி :
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடிகை அனுஷ்கா ரெட்டி . கணினி அறிவியலில் இளங்களை பட்டம் பெற்ற அனுஷ்கா ஒரு ஆசிரியர். அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் யோகாவை கற்றுக்கொள்ள ஆரமித்தவர் . பிந்நாட்களில் அதன் மீது ஆர்வம் அதிகமாகவே மும்பையில் உள்ள பிரபல யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகாவை முறையாக பயின்று , அதில் தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியரானார்.
View this post on Instagram
யோகா குருவால் கிடைத்த சினிமா வாய்ப்பு :
அனுஷ்காவின் யோகா குரு பரத் தாகூரின் மனைவிபிரபல நடிகை பூமிகா. இவர் தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகை என்பதால் இவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் என்பர் அனுஷ்காவை ஹீரோயினாக நடிக்க வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அனுஷ்காவிற்கு அதில் பெரிய நாட்டம் இல்லை. உடனே பூமிகாவின் கணவரும் , யோகா குருவுமான பரத்தின் அறிவுரையை ஏற்று , பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை சந்தித்திருக்கிறார் அனுஷ்கா. அப்போது ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டு , நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ‘’சூப்பர் ‘ என்னும் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
View this post on Instagram
’ஸ்வீட்டி ‘ அனுஷ்காவாக மாறிய பின்னணி :
அனுஷ்காவின் இயற்பெயர் ஸ்வீட்டி . இந்த பெயரை முதல் படத்திலேயே மாற்றுமாறு நடிகர் நாகார்ஜூனா அனுஷ்காவிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். நானும் அந்த பெயரை மாற்ற வேண்டுமென்றுதான் நினைத்தேன் என கூறும் அனுஷ்காவிடம் ஏன் என கேட்டதற்கு , இந்த பெயரை வைத்து அதீத அன்பால் பலரும் கூப்பிடுவார்கள் . அதனால் செட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஸ்வீட்டி , ஸ்வீட்டி என என்னை கூப்பிடுவதை நான் விரும்பவில்லை. எனவே என் அப்பாவிடம் நான் பெயரை மாற்றும்படி கேட்டேன். அவர் யாருக்கும் தனக்கு தானே பெயர் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. நீயே உனக்கான பெயரை தேர்வு செய்துக்கொள் என்றார். நான் படக்குழுவுடன் அமர்ந்து ஒரு பெயரை தேர்வு செய்தேன் . அது இந்தி நடிகர் சோனு சூத் எனக்காக தேர்வு செய்திருந்தார். ஆனால் அது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. முதல் படம் வெளியாகி சில மாதங்களுக்கு பிறகு எனது பெயரை நானே தேர்வு செய்து அனுஷ்கா என மாற்றிக்கொண்டேன் என்றார். அனுஷ்கா தமிழில் வெளியான ‘ரெண்டு’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.