மேலும் அறிய

தியேட்டர்களை தொடர்ந்து இயக்க அவசர கூட்டத்தில் முடிவு

திரையரங்குகளை மூடாமல் தொடர்ந்து இயக்குவது என திரையரங்க உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போடப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் முழுமையாக மூடப்பட்டன. இதனால் பல தியேட்டர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாமல் வீட்டுக்கு அனுப்பினர். அதுமட்டுமின்றி பல தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. சில தியேட்டர்கள் மண்டபங்களாக மாற்றப்பட்டன. 

பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக தியேட்டர் நடத்தியவர்கள் கூட ஊரடங்கால் தொழில் நடத்த முடியாமல் தொழிலை நிறுத்திவிட்ட மாற்றுத் தொழிலை தேட துவங்கினர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு  கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போது, மீண்டும் தொழில் எழும் என்ற நம்பிக்கை எஞ்சியிருந்த திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்தது. முன்னணி நடிகர்களின் படமான மாஸ்டர், கர்ணன், சுல்தான் போன்றவை தியேட்டர்களுக்கு ரசிகர்களை அழைத்து வரும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பினர். ஆனால் எதிர்பார்த்த அளவு அவை போகவில்லை. மேலும் வெளியான சில வாரங்களிலேயே திரைப்படங்கள் ஓடிடி வசம் சென்றன. 


தியேட்டர்களை தொடர்ந்து இயக்க அவசர கூட்டத்தில் முடிவு

மீண்டும் நிலை திரும்பும் பழைய படி திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை அதிகரித்து தொழில் மீண்டும் மலர்ச்சியடையும் என்று எதிர்பார்த்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு மீண்டும் பேரிடி விழுந்தது. இரவு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு,  திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததது தமிழக அரசு. அதன் படி  திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டும் அனுமதித்து தமிழக அரசு மறு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இரவு 10 மணிக்கு மேல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் தியேட்டர்களுக்கு மேலும் அது பாதிப்பு. இப்படி பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் எப்படி திரையரங்கை நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அந்த பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள், 50 சதவீத இருக்கையில் தியேட்டர்களை இயக்குவது கடினம் என்கிற கருத்தை முன்வைத்தனர். 


தியேட்டர்களை தொடர்ந்து இயக்க அவசர கூட்டத்தில் முடிவு

இந்த பொது முடக்க அறிவிப்புக்கு முன்பே தியேட்டர்களுக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்த நிலையில், கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நாளில் எப்படி தியேட்டரை நிர்வகிப்பது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் ஓடிடி மோகம் அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர்களை மூடினால் அது தொழிலை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதால், கடினங்களை கடந்து தியேட்டர்களை இயக்குவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. 


தியேட்டர்களை தொடர்ந்து இயக்க அவசர கூட்டத்தில் முடிவு

நெருக்கடியான காலகட்டம் என்றாலும், தொழிலின் நன்மை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள், இந்த சவாலான காலகட்டத்தில் படத்தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பை பெறவும் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பாக இது போன்ற சவாலான சூழல் ஏற்படும் போது சதவீத அடிப்படையில் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வந்தனர். அதே போல இம்முறையும் பெருநஷ்டம் ஏற்படாத வகையில் சுமூகமான உடன்படிக்கை மூலம் படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget