‛ரொம்ப நன்றி ஜி’ பிரபல நடிகையிடம் நெகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான் தனது திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவிற்கு ட்விட்டர் மூலம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்
உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவிற்கு ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 99 சாங்ஸ் திரைப்படத்தில் மிகவும் குறுகிய நேரமே திரையில் தோன்றினாலும் மிகவும் அழுத்தமான வசனங்களை பேசி நடித்த உங்களுக்கு நன்றிகள் பல என்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். நேற்று மனிஷா கொய்ராலாவும் , ‛இந்த படத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு நடித்தேன் ஐ லவ் திஸ் பிலிம்,’ என்று நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
Less screen time ...but the most memorable dialogues ...#99Songsthemovie team is honoured by your presence and support Ji 🌺 https://t.co/62Ze3j5BYN
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) May 23, 2021
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியராக அறிமுகமானா திரைப்படம் தான் 99 சாங்ஸ். ஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. பாடல்கள் அனைத்துமே வைரல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது, ரஹ்மான் இசையமைப்பில் மொத்தம் 14 பாடல்கள் இந்த படத்தில் உள்ளன.
இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே .
படத்தின் ஹிந்தி வசங்களை ஹுசைன் தலால், தமிழில் கவுதம் மேனன் மற்றும் தெலுங்கில் கிரண் ஆகியோர் எழுதியுள்ளனர். மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி படம் வெளியானதை அடுத்து திரையுலக நடிகர்கள் அனைவரும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
So proud of this film, even though it’s a small role but grateful to be part of this film!! I LOVE This film #99Songs @arrahman #vishweshkrishnamoorthy #EhanBhat @Lisaraniray https://t.co/TfBRfWTjEH
— Manisha Koirala (@mkoirala) May 23, 2021
1992ம் ஆண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தான் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் பெற்றார் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய எல்லா இந்திய மொழி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ள ரகுமான், மாண்டரின் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது தமிழர்கள் பெருமைகொள்ளும் விஷயமாக உள்ளது.
உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளை இரண்டு முறையும், இந்திய அளவில் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதினை ஐந்து முறையும் பெற்றுள்ளார் ரகுமான். SIIMA மற்றும் Filmfare உள்பட பல விருதுகளை தற்போதுவரை குவித்து வருகின்றார். இறுதியாக தனது படைப்பான 99 சாங்ஸ் படத்திற்கு இசையமைத்த ரகுமான் 2022ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வம் படத்திலும் பணியாற்றி வருகின்றார்.