Thangalaan: அசுர வேகம்... அரக்க பார்வை...! பிறந்த நாளில் சீறிப்பாய்ந்த சீயானின் தங்கலான் படப்பிடிப்பு வீடியோ!
நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் தங்கலான் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் தங்கலான் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணி
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்குவதால் பட அறிவிப்பு வெளியான போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தங்கலான் படத்தின் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியில் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தாண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடம் இப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தங்கலான் அப்டேட்
இதனிடையே விக்ரம் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை மேலும் சிறப்பிக்கும் வகையில் நேற்றைய தினம் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், தங்கலான் உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தங்கலான் படத்தின் புதிய அப்டேட் வெளியானது.
அதன்படி தங்கலான் படத்தின் மேக்கிங் வெளியாகியுள்ளது. இதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளது. இதற்கிடையில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், விக்ரம் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கலான் படத்தின் லுக்கில் தான் கலந்து கொள்கிறார். மேலும் இப்படத்துக்காக உடல் எடையை குறைத்து தன்னை மெருக்கேற்றி கொண்டுள்ளார்.