Thangalaan: தங்கலானில் அசுரத்தனமான அர்ப்பணிப்பு.. விக்ரம் பிறந்தநாளில் வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ.!
HBD Vikram: நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் ஒன்றை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் தங்கலான் படத்தின் அப்டேட்டை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபராக வலம் வரும் விக்ரம் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் எக்ஸ் வலைத்தளத்தில் #HBDChiyaanVikram, #HBDVikram என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. விக்ரமின் ரசிகர்கள் போஸ்டர், பேனர், நலத்திட்ட உதவிகள் என அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இப்படியான நிலையில் இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் வகையில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படம் மற்றும் அடுத்ததாக நடிக்கப்போகும் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் தங்கலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
An iconic talent, inspiring awe with grit and glory, delivering performances that defy expectations ❤️
— Studio Green (@StudioGreen2) April 17, 2024
Happy Birthday @chiyaan #Thangalaan 🏹 Awaiting your fiery presence on big screens! #HBDChiyaan @Thangalaan @beemji @GnanavelrajaKe #StudioGreen #JyotiDeshpande @jiostudios… pic.twitter.com/gflnUS1woV
மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் இருக்கும் விக்ரமை பார்த்தாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறும் அளவுக்கு தங்கலான் படம் உருவாகி வருகிறது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது.
அதன்பின் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தள்ளிப்போகியுள்ளது. மே மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கலான் படம் விரைவில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு நடித்த விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.