மேலும் அறிய

Thambi Ramaiah: தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா தான் தம்பி ராமையா கூறிய உருக்கமான தகவல்!

தற்கொலை செய்ய முயற்சித்த தன்னை காப்பாற்றியதே நயன்தாரா தான் என்று தம்பி ராமையா உருக்கமாக பேசியுள்ளார்.

தம்பி ராமையா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் தம்பி ராமையா. 1999 ஆம் ஆண்டு வந்த 'மலபார் போலீஸ்' படத்தில் துவங்கிய இவருடைய நடிப்பு 'இந்தியன் 2' வரை அசாதனமான வளர்ச்சியை எட்டியது. குக்கி படத்தில் நடித்ததற்காக சிறந்த காமெடி நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

ஹீரோவின் அப்பா, வழக்கமான காமெடி ரோல் என இல்லாமல் வில்லனுக்கு அப்பா, ஹீரோயினுக்கு அப்பா, மாமா, சித்தப்பா என வெரைட்டியான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவான 'ராஜாகிளி' என்ற படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. மூன்று மனைவிகளை கல்யாணம் செய்து ஜெகஜோதிகாக வாழும் தம்பி ராமையா, எப்படி பிச்சைக்காரர் ஆகிறார் என்பதை இந்த படத்தை கதைக்களம்.

தற்கொலை எண்ணம்:

இந்த நிலையில் தான், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,, நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக கூறியுள்ளார்.  இது குறித்து அவர் என்ன கூறுகையில், "ஒரு சில கட்டத்தில் நாம் அனைவருக்கும் அட்வைஸ் செய்வோம். ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலும் நாம் தற்கொலைக்கு முயற்சிப்போம். அப்படி ஒரு சூழல் எனக்கும் வந்திருக்கிறது. 

அம்மாவின் மரணம்:

அவருக்கு அம்மா என்றால் ரொம்பவே பிரியம். என்னுடைய அப்பா போன்று தனக்கும் கவிதைகள் எழுதுவது ரொம்ப பிடிக்கும். என்னுடைய கவிதை எழுதும் திறன் மூலமாகத்தான் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். அம்மாவுக்கும் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட அம்மா ஒரு நாள் இறந்துவிட அந்த சோகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அம்மா இறக்கும் போது மகளுக்கு மட்டுமே திருமணம் செய்து வைத்திருந்தோம். ஆனால், மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது தான் அம்மாவின் சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவர்கள் சென்ற இடத்திற்கு நானும் செல்ல முடிவு செய்தேன். அது எனக்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்தேன். 

இன்னொரு கவலையும் இருந்தது. அப்போது நான் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்ஸ் வாங்கிருந்தேன். அதுல ஒரு படம் தான் 'டோரா'. ஒருவேளை நான் தற்கொலை செய்துவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமே என்று நினைத்தேன். அந்த நேரத்தில் எனக்கு நயன்தாரா கால் பண்ணி அம்மா இறந்தது குறித்து விசாரிச்சாங்க. அதுதான் எனக்கு டர்னிங் பாய்ண்ட். வாழ்க்கையின் எதார்த்தம் என்ன என்பதை எனக்கு புரிய வச்சாங்க. அதன் பிறகு நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை விட்டுவிட்டேன். 

Thambi Ramaiah: தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா தான் தம்பி ராமையா கூறிய உருக்கமான தகவல்!

எதார்த்தத்தை புரிய வைத்த நயன்தாரா:

ஒருவேளை அந்த நேரத்தில் நயன்தாரா எனக்கு கால் செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்திருப்பேன். என்னுடைய மகன் திருமணத்தின் போது நான் யோசித்து பார்த்தேன், தற்கொலை செய்திருந்தால் மகனின் திருமணத்தை பார்த்திருக்க முடியாது. யாருக்கும் கஷ்டம் வராமல் இல்லை. எல்லோருக்கும் கஷ்டம் வரும் போகும். ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். அப்படி ஒரு எண்ணம் வந்தால் உங்களுக்கு பிடித்தவர்களிடன் பேசுங்கள். இல்லையென்றால் அந்த இடத்திலிருந்து விலகி செல்லுங்கள். தற்கொலை யாருக்கும் நிரந்தர தீர்வு கிடையாது. அதை கடந்து வந்தால் வாழ்க்கை ஒரு நாள் நம்மை மாற்றும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget