Thalapathy 68: கப்பு முக்கியம் பிகிலு.. மீண்டும் விஜயுடன் இணையும் அட்லீ.. வெளியானது ‘தளபதி 68’ அறிவிப்பு!
நடிகர் விஜயின் 68 ஆவது படத்தின் இயக்குநர் குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது;
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மார்க்கெட்டும் ரசிகர் பட்டாளமும் இமய மலைக்கு ஒப்பானது. இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ' வாரிசு' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் வெகு தீவிரமாக நடந்தேறி வருகிறது.
இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது.'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. தமிழில் இயக்குனர் வம்சி நடிகர் கார்த்தியை வைத்து ' தோழா' திரைப்படத்தை இயக்கி தமிழ் மக்கள் மனதில் பரிட்சையமானார்.
விஜய் 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருக்கிறார்.இந்த திரைப்படம் குறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இதற்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ' மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.
அதனை தொடர்ந்து அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையப்போகிறது; விக்ரம்' திரைப்படத்தின் அசுர வெற்றியால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்திற்கு எதிர்பார்பு அதிகளவில் இருந்து வருகிறது.'தளபதி 67' திரைப்படமும் 'எல்.சி.யு' வில் இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் இருந்து வருகிறது.'தளபதி 67' இல் விஜய் க்கு ஜோடியாக திரிஷா இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு ஒரு புறம் எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வரும் நிலையில்.'தளபதி 68' திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு விஜயை வைத்து 'தெறி,மெர்சல்,பிகில்' என மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயுடன் விஜய் மீண்டும் இணையப் போவதாக கூறப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தை ' சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இத்திரைப்படத்திற்கு விஜய்க்கு 150 கோடியும், இயக்குனர் அட்லீக்கு 50 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் அட்லீ 'ராஜா ராணி' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார்.இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ' ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதில் விஜய் சேதுபதி,நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்;
அண்மையில் அட்லி ப்ரியா தம்பதி தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். அந்த பதிவில், “எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் ! நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா மற்றும் பெக்கி'', என தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் அட்லீ பிரியா தம்பதி இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அட்லீ- ப்ரியா வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினார்.