படப்பூஜையுடன் இன்று தொடங்கியது நெல்சன் இயக்கும் தளபதி 65
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் தளபதி 65 படப்பூஜையுடன் இன்று புதன்கிழமை சென்னையில் தொடங்கப்பட்டது .
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் தளபதி 65 படப்பூஜையுடன் இன்று புதன்கிழமை சென்னையில் தொடங்கப்பட்டது .
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி 65 பட பூஜையுடன் இன்று புதன்கிழமை சென்னையில் தொடங்கப்பட்டது . படத்தின் பூஜையில் விஜய் , இயக்குநர் நெல்சன் , டான்சர் சதீஸ் மற்றும் பலர் சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் கலந்துகொண்டனர் . முதலில் ஒரு பாடல் கட்சியை எடுத்த பின்பு மற்ற காட்சிகளுக்காக வேறு இடங்களில் படமாக்கப்படும் என்று படக்குழுவினர் கூறினார்கள் .

#Thalapathy65Poojai@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja#Thalapathy65 pic.twitter.com/ZTbe3eigQZ
— Sun Pictures (@sunpictures) March 31, 2021

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கும் பெரிய பட்ஜெட் திரைப்படம் இது. சில வாரங்களுக்கு முன்புதான் படத்தின் பெண் லீடாக பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டார். படத்தின் கதை குறித்து எந்த விவரமும் வெளிவராத நிலையில் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கலவையாக இருக்கும் என்று ஒரு சில செய்திகள் தெரிவிக்கின்றன. டாக்டர் பட ரிலீஸ் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு, கொரோனா தடுப்புப் பாதுகாப்பு முறைகளுடன் ஷூட்டிங் முழுமூச்சில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.