Thalaivar 170: திருநெல்வேலியில் தலைவர் 170 படப்பிடிப்பு.. ஷூட்டிங் தளத்தில் ரசிகர்களுக்காக ரஜினி செய்த காரியம்!
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் உள்ள தள ஓடு ஆலையில் தலைவர் 170 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தலைவர் 171
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 170 திரைப்படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். லைகா புரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமூகக் கருத்துள்ள நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக தலைவர் 170 படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. கேரளாவில் இந்தப் படத்திற்காக பூஜை போடப்பட்டது. படபிடிப்பு நேரங்களைத் தவிர்த்து கேரள திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் அவ்வபோது வெளியாகி வந்தன.
ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்திற்கான எதிர்பார்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக மோகன்லால் ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த காரணத்தினால், ஜெயிலர் படம் தமிழைத் தவிர்த்து பிற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது தலைவர் 170 படத்தில் பல்வேறு நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படத்தைப் போல் இந்தப் படமும் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதை உறுதியாக நம்பலாம்.
திருநெல்வேலியில் படபிடிப்பு
After completing #Thalaivar170 Kerala schedule, Superstar #Rajinikanth enters Tirunelveli, TN for new schedule.
— Manobala Vijayabalan (@ManobalaV) October 10, 2023
Shouts of "Thalaiva Thalaiva thanga… pic.twitter.com/JegfWJVElR
கேரளாவைத் தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் உள்ள தள ஓடு ஆலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் இருந்து பணகுடிக்கு காரில் வருகை தந்தார். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு முன்னதாக திரண்டு இருந்த ரசிகர்களைப் பார்த்த உடன் காரை நிறுத்தி அனைவருக்கும் கைக்கொடுத்து வணக்கம் செலுத்தி விட்டு சென்றார் ரஜினிகாந்த். இந்த வீடியோ இணையதளத்தில் ரஜினி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கிரிகெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலன்று இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
தலைவர் 171
தலைவர் 170 படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் சில காட்சிகளை ஐ மேக்ஸ் கேமராவில் படம்பிடிக்க இருப்பதாக சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.