7 மணிக்கே வந்து சாவடிக்குறான்.. ஆகாச வீரன் - பேரரசி எனக்கு பிடித்த ஜோடி.. தலைவன் தலைவி படக்கு
தலைவன் தலைவி படக்குழு ஒன்றாக இணைந்து ஜாலியாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா ஆகியார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள போட்டாலே முட்டையை பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. இப்பாடலின் மூலம் பின்னணி பாடகர் சுபாஷினியும் பிரபலமாகியுள்ளார். எனவே, தலைவன் தலைவி படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் ஜாலியாகவும், தொகுப்பாளரின் கேள்விக்கு கலகலப்பான பதில்களை அளித்துள்ளனர்.
ஆகாச வீரன் - பேரரசி
தலைவன் தலைவி படத்தின் கதை எழுதும்போதே மனதில் ஆகாச வீரன் கதாப்பாத்திரம் ஆழமாக பதிந்துவிட்டது. பேரரசி என்றால் அது நித்யா தான் அவரை தவிர யாரும் நடிக்க முடியாது. அந்த அளவிற்கு விஜய் சேதுபதியும், நித்யாவும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் நீங்க ஆகாச வீரன் கதாப்பாத்திரத்தை ஜட்ஜ் பண்ணவே முடியாது. ஆரம்பத்தில் மாஸ் படம் மாதிரி தெரியும், அப்புறம் பேமிலி டிராமா, காமெடி, காதல் என ரசிகர்களை ரசிக்க வைக்கும் படமாக இருக்கும். இந்த படம் எந்தமாதிரியான ஜானர் என்பதையும் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு ஜாலியா போகும் என பாண்டிராஜ் தெரிவித்தார்.
எனக்கு சரியான ஃபேர் இதுதான்
பிறகு பேசிய இயக்குநர் பாண்டிராஜ், நான் எடுத்த படங்களிலேயே எனக்கு சரியான ஃபேர் அமைந்தது இதுதான். நான் கதையில் என்ன எழுதினேனோ அதுதான் வந்திருக்கிறது. சில நேரங்களில் விஜய் சேதுபதியும் - நித்யாவும் நடிப்பதை பார்க்க படப்பிடிப்பு தளத்தில் மொத்த யூனிட்டும் வந்திடும். அது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. சில நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் 7 மணிக்கே ஷாட் வைத்து சாகடிக்கிறான். 6.20 வரை கொண்டு போறான். இன்னும் பணம் வரலை. என்ன படம் எடுக்குறான் தெரியலை என்று பட டெக்னீசியன்கள் பேசி கேட்டிருக்கிறேன். இதில் அப்படி இல்லை என பாண்டிராஜ் தெரிவித்தார்.
வளநாடு தூண்டி கருப்பர் கோயில்
பிறகு பேசிய நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வளநாடு தூண்டி கருப்பர் கோயிலுக்கு போனது ஆச்சர்யமாக இருந்தது. அங்கே ஆகாச வீரன் என்ற பெயரில் ஒரு வம்சமே இருக்கு. இதை பார்த்து பிரம்மிப்பா இருந்தது. நாம கற்பனை பண்ணமுடியாத அளவிற்கு பெரிய கோயில் சொல்ல முடியாது. அங்கிருக்கும் மக்கள் வேலை காணிக்கையாக சாத்துவார்கள். அந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்ததும் மறக்க முடியாத அனுபவம். அதே மாதிரி படப்பிடிப்பு தளத்தில் நித்யா, பாண்டிராஜ் சாருக்கு சமைச்சு கொடுத்தேன். இதுல எனன ஹைலட்னா தலைவன் தலைவி டீசருக்காக எடுத்தபோது சால்னா ஊத்தி பரோட்டாவை கொத்து பரோட்டா செஞ்சோம். ஆனால், அது பொங்கல் பரோட்டாவா மாறிடுச்சு என விஜய் சேதுபதி தெரிவித்தார்.





















